அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனத்தில் குழந்தைகள் அறிவியல் திருவிழாவை மத்திய இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்
Posted On:
06 NOV 2023 4:06PM by PIB Chennai
இளம் திறமையார்களின் திறன்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் பயன்படுத்துவதை வலியுறுத்தியுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக் கவுன்சிலின் இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம் (சிஎஸ்ஐஆர்-ஐஐஐஎம்) ஏற்பாடு செய்துள்ள "குழந்தைகள் அறிவியல் திருவிழாவை" ஜம்முவில் இன்று (06-11-2023) திரு ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்துப் பேசினார்.
கண்காட்சி அரங்குகளில், மாணவர்கள் தயாரித்த பல்வேறு வகையான அறிவியல் மாதிரிகளை திரு ஜிதேந்திர சிங் பார்வையிட்டார். பின்னர் பள்ளி மாணவர்களிடையே உரையாற்றிய திரு ஜிதேந்திர சிங், சிஎஸ்ஐஆரின் ஜிக்யாசா எனப்படும் இளம் அறிவியல் திறமையாளர்களை ஊக்கவிக்கும் திட்டத்தின் சிறப்புகளை விவரித்தார். ஜிக்யாசா என்பது கேந்திரிய வித்யாலயா சங்கதனுடன் (கேவிஎஸ்) இணைந்து அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) செயல்படுத்தும் மாணவர் - விஞ்ஞானிகள் இணைப்பு திட்டம் என்பதை அவர் விளக்கினார்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்காக இதுபோன்ற தொடர்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யும் சிஎஸ்ஐஆர்-ஐஐஐஎம்-ன் முயற்சிகளை திரு ஜிதேந்திர சிங் பாராட்டினார். இத்தகைய நடவடிக்கைகள் அறிவியல் திறனை அதிகரிக்கவும், இளம் உள்ளங்களின் புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு உணர்வை வளர்க்கவும் உதவுகின்றன என்று அவர் கூறினார். குழந்தைகள் அறிவியல் திருவிழாவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் திரு ஜிதேந்திர சிங் வழங்கினார்.
இந்தக் குழந்தைகள் அறிவியல் திருவிழாவில், ஜம்மு பிராந்தியத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஜம்மு காஷ்மீர் அரசின் கீழ் உள்ள சுமார் 55 பள்ளிகள், கேந்திரிய வித்யாலயாக்கள், நவோதயா வித்யாலயாக்கள், ராணுவ பொதுப் பள்ளிகள், பாரதிய வித்யா மந்திர் பள்ளிகள் போன்றவற்றைச் சேர்ந்த 350 க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுத் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
(Release ID: 1975035)
***
PKV/PLM/KRS
(Release ID: 1975104)
Visitor Counter : 134