சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறையின் கள அலுவலகங்கள் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை கொண்டாடுகின்றன

Posted On: 02 NOV 2023 7:10PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறையின் கள தணிக்கை அலுவலகங்கள் 2023 அக்டோபர் 30 முதல் நவம்பர் 5 வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தைக் கொண்டாடி வருகின்றன. இந்த வாரத்தில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

 

தேனாம்பேட்டையில் உள்ள தணிக்கை அலுவலகக் கட்டிடத்தில் இன்று நிறைவு விழா நடைபெற்றது. அதில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு சங்கர் ஜிவால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

 

அப்போது பேசிய அவர், அரசு செயல்பாட்டின் அனைத்துத் துறைகளிலும் விழிப்புணர்வின் அவசியத்தை வலியுறுத்தினார். தணிக்கைத்துறை தனது அறிக்கைகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தணிக்கையின் பங்கைப் பாராட்டினார்.

 

சைபர் குற்றங்கள் ஆபத்தான விகிதத்தில் வளர்ந்து வருவதாகவும், பிரத்யேக சைபர் குற்ற உதவி எண் 1930 மூலம் தினமும் சுமார் 800 அழைப்புகள் தமிழ்நாடு காவல்துறைக்கு  வருவதாகவும் அவர் கூறினார். அனைத்து தரப்பு மக்களையும் குறிவைக்கும் முகமற்ற மற்றும் எல்லையற்ற எதிரிகளிடமிருந்து பாதுகாக்க சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பார்வையாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

 

ஒவ்வொரு மாதமும் தரவுகள் புதுப்பிக்கப்படும் சைபர் குற்றவாளிகளின்  செயல் முறைகளைப் பிரச்சாரம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட காவல் துறையின் முயற்சிகள் குறித்தும் டிஜிபி விளக்கினார்.

 

இந்தத் தகவலை காவல்துறையால் விநியோகிக்கப்பட்ட க்யூ ஆர் குறியீடு மூலம் அணுகலாம். திரு. சி.நெடுஞ்செழியன், முதன்மை தலைமை கணக்காளர், திரு கே.பி. முதன்மைக் கணக்காளர் நாயகம் ஆனந்த், தணிக்கை முதன்மை இயக்குநர் திருமதி பி.மாதவி ஆகியோர் விழாவில் சிறப்புரையாற்றினர். முதுநிலை துணைக் கணக்காளர் திரு.ஜி.ராஜேந்திரன் அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது.

 

 

AD/BS/KRS


(Release ID: 1974254) Visitor Counter : 88


Read this release in: English