குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற ஆந்திரா மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் குடியரசுத் துணைதலைவர் உரையாற்றினார்
Posted On:
28 OCT 2023 6:53PM by PIB Chennai
மக்கள் மருத்துவமனைக்கு வராமலேயே அனைத்து மருத்துவ வசதிகளையும் பெறுவதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்குவதன் மூலம் முழுமையான மருத்துவ கவனிப்பின் அவசியத்தை குடியரசுத் துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் இன்று வலியுறுத்தினார்.
அனைத்து வகையான மருத்துவ சிகிச்சைகளையும் ஒருங்கிணைக்க அழைப்பு விடுத்த அவர், அலோபதி மற்றும் நமது பழமையான மருத்துவ சிகிச்சை முறைகள் மனிதகுலத்திற்கு உதவ ஒன்றிணைய வேண்டும் என்றார்.
விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற ஆந்திரா மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய குடியரசுத் துணைத்தலைவர், 2014 ஆம் ஆண்டில் ஆயுஷ் அமைச்சகம் அமைக்கப்பட்டது நமது நாட்டிற்கு ஒரு மைல்கல்லான தருணம் என்று விவரித்தார்.
மருத்துவத் தொழில் ஒரு புனிதமான தொழில், மனிதகுலத்திற்கான சேவை என்று திரு ஜக்தீப் தங்கர் விவரித்தார். கடவுளுக்கு அடுத்தபடியாக மருத்துவர்கள்தான் அழைக்கப்படுகிறார்கள் என்று கூறிய குடியரசுத் துணைத்தலைவர், இருப்பினும், வணிகமயமாக்கும் நோக்கில் வளர்ந்துள்ள சில நிறுவனங்களுக்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். "நாம் உயர் நெறிமுறை தரங்களைக் கொண்ட கலாச்சாரத்தைக் கொண்டிருக்க வேண்டும், நாம் ஒரு சூழல் அமைப்பை உருவாக்க வேண்டும், சுய ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க வேண்டும்" என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.
நாட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதார செழிப்பை வளர்ப்பதில் நல்ல ஆரோக்கியத்தின் முக்கியப் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டிய குடியரசுத் துணைத்தலைவர், "நமது மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை நிலைநிறுத்தவும் பாதுகாக்கவும் முடியும்" என்று குறிப்பிட்டார்.
விசாகப்பட்டினத்திற்கு ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் துணைத்தலைவர், முன்னதாக ஆந்திரா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மற்றும் உயிர்மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் ஆந்திரா மருத்துவக் கல்லூரியின் முதல் நாள் அஞ்சல் அட்டை மற்றும் நூற்றாண்டு காபி டேபிள் புத்தகத்தை வெளியிட்டார். இந்த சுற்றுப்பயணத்தின் போது அவர் கிழக்கு கடற்படை கட்டளையையும் பார்வையிட்டார்.
ஆந்திர மாநில ஆளுநர் திரு எஸ்.அப்துல் நசீர், ஆந்திர அரசின் சுகாதாரம், குடும்ப நலம் மற்றும் மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் திருமதி விடாதலா ரஜினி உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
***
ANU/AD/BS/DL
(Release ID: 1972645)
Visitor Counter : 104