குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஆந்திரா மருத்துவக் கல்லூரி நூற்றாண்டு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் ஆற்றிய உரை

प्रविष्टि तिथि: 28 OCT 2023 5:54PM by PIB Chennai

அனைவருக்கும் காலை வணக்கம்!

நமஸ்காரம்!

விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா மருத்துவ தொழில்நுட்ப மண்டலம் உலகில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும், இது 300க்கும் மேற்பட்ட மருத்துவ நிறுவனங்களின் தாயகமாகும். இது  நமது காலத்தின் உயர் தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்களின் பெரும் தேவையைப் பற்றி பேசுகிறது, மேலும் இந்த இடம் உயர் தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்களை பூர்த்தி செய்ய  மிகவும் பொருத்தமானது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

நமது நாடு, இப்போது பெருமளவில் இறக்குமதி செய்யும் உயர் தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்களை இனி உலகத்திற்கு சப்ளை செய்யும். இங்கே அதிகம் சொல்லப்பட்ட பிற அம்சங்களைப் பற்றி நான் சொல்ல மாட்டேன், ஆனால் இது என் மகிழ்ச்சியை அதிகரிக்கிறது, எனக்கு ஒரு சிறந்த தருணம், தொழில் வல்லுநர்கள், மருத்துவத் துறையில் மாணவர்கள் ஆகியோருடன் நான் இருக்கும் மறக்க முடியாத தருணம், ஒரு நூற்றாண்டு காலமாக நீங்கள் மேற்கொண்ட குறிப்பிடத்தக்க பயணத்திற்கு வாழ்த்துகள்.

ஆந்திரா மருத்துவக் கல்லூரி நூற்றாண்டு விழா நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆவது ஆண்டில் நடக்கிறது, பாரதத்தின் சேவைக்காக இந்த காலகட்டத்தில் இருப்பதில் நாம் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள் , நமது அபரிமிதமான வளர்ச்சி உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மிக மிக நன்றி.

***

ANU/AD/BS/DL


(रिलीज़ आईडी: 1972639) आगंतुक पटल : 131
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी