தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
திரைப்படச் சந்தை 2023-ல் இணை தயாரிப்பு திட்டங்களுக்கான தேர்வை என்.எஃப்.டி.சி அறிவித்துள்ளது
11 நாடுகளைச் சேர்ந்த 20 திட்டங்களில் இந்தி, ஆங்கிலம், மராத்தி, பெங்காலி, குஜராத்தி, ஒடியா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சிங்களம், ஜெர்மன், ஹீப்ரு உள்ளிட்ட இந்திய மற்றும் சர்வதேச மொழிகள் உள்ளன.
प्रविष्टि तिथि:
25 OCT 2023 3:59PM by PIB Chennai
கோவாவின் மேரியட் ரிசார்ட்டில் 2023, நவம்பர் 20 முதல் 24 வரை நடைபெறவுள்ள திரைப்படச் சந்தையில் 17 வது இணை தயாரிப்பு சந்தைத் திட்டங்களின் அதிகாரப்பூர்வ தேர்வை தேசிய திரைப்படங்கள் மேம்பாட்டுக் கழகம் (என்.எஃப்.டி.சி) வெளியிட்டுள்ளது.
இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜெர்மனி, பிரான்ஸ், போலந்து, லக்சம்பர்க், இஸ்ரேல் ஆகிய நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்கள் திட்டங்களை சர்வதேச மற்றும் இந்திய தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விழா ஒருங்கிணைப்பாளர்கள், நிதியுதவி செய்வோர் மற்றும் விற்பனை முகவர்களுக்கு வழங்குவார்கள்.
இந்திய சர்வதேச திரைப்பட விழா மற்றும் திரைப்பட சந்தையின் இயக்குநரும், திரைப்படங்கள் பிரிவு இணைச் செயலாளரும், என்.எஃப்.டி.சி நிர்வாக இயக்குநருமான திரு.பிரித்துல் குமார் கூறுகையில், "இணை தயாரிப்பு சந்தை திரைப்படச் சந்தையின் மிக முக்கியமான பிரிவுகளில் ஒன்றாகும். இது தொடர்ந்து குறிப்பிடத்தக்க திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த ஆண்டு, 19 நாடுகளில் இருந்து, 27 மொழிகளில், 142 திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு நாங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
2023 ஆம் ஆண்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களில் முயல் துளை | சிங்களம், தமிழ் | இலங்கை திரைப்படமும் அடங்கும். இதன் இயக்குநர் - இளங்கோ ராமநாதன்.
இளங்கோ கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவிலும், 14 குறும்பட விழாவிலும் நடுவர் குழு உறுப்பினராக இருந்தவர். இவர் 350 க்கும் மேற்பட்ட இலங்கை மற்றும் சர்வதேச தொலைக்காட்சி விளம்பரங்களை இயக்கியுள்ளார். சைலண்ட் டியர்ஸ் என்ற குறும்படம் 19 விருதுகளுடன் 28 சர்வதேச விழாக்களுக்குச் சென்று லோகார்னோ ஓபன் டோர்ஸில் திரையிடப்பட்டது. கிளினிக் காத்மாண்டு - டாக் ஸ்கூலில் அவரது திட்டங்கள் "இறந்த உடலின் வாசனை" மற்றும் "சவப்பெட்டியில் வளைவு" (டென்டிகோ என்று மறுபெயரிடப்பட்டது). அவரது முதல் படமான டென்டிகோ டால்லின் பிளாக் நைட்ஸ் திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து டென்டிகோ படத்தை இந்தியாவில் ரீமேக் செய்யவுள்ளார்.
*******
ANU/AD/SMB/KRS
(रिलीज़ आईडी: 1971124)
आगंतुक पटल : 230