இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் மற்றும் ஹரியானா முதலமைச்சர் திரு மனோகர் லால் கட்டார், ஹரியானாவில் 15 கேலோ இந்தியா விளையாட்டு மையங்களை தொடங்கி வைத்தனர்

प्रविष्टि तिथि: 20 OCT 2023 6:06PM by PIB Chennai

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் மற்றும் ஹரியானா முதலமைச்சர் திரு மனோகர் லால் கட்டார் இணைந்து ஹரியானாவில் மொத்தம் 15 கேலோ இந்தியா விளையாட்டு மையங்களை இன்று (20-10-2023) தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயல் இயக்குநர் திருமதி லலிதா சர்மா மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பிற அதிகாரிகள்  கலந்து கொண்டனர். நாடு முழுவதும் 1000 கேலோ இந்தியா மையங்கள் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அதன் ஒரு பகுதியாக இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், ஹரியானாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த 15 கேலோ இந்தியா மையங்கள் எதிர்கால சாம்பியன்களை தயார்படுத்த உதவும் என்றார்.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் ஹரியானா முன்னணி இடத்தில் உள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டின் விளையாட்டு சாதனைகளுக்குப் பங்களிப்பதில் ஹரியானா முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். கேலோ இந்தியா திட்டத்தின் மூலம், மத்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த முறையில் ஆதரவளித்து வருவதாக திரு அனுராக் சிங் தாக்கூர் கூறினார்.

*******

ANU/AD/PLM/KPG


(रिलीज़ आईडी: 1969513) आगंतुक पटल : 197
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi