சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) சார்பில் காலணி மற்றும் காலணி உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி வேலூரில் இன்று நடைபெற்றது
Posted On:
17 OCT 2023 7:39PM by PIB Chennai
காலணிகள் / காலணி உதிரிபாகங்கள், பிஐஎஸ் கட்டாய சான்றிதழ் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, மத்திய அரசால் வெளியிடப்பட்ட தரக்கட்டுப்பாட்டு ஆணைகளை (கியூ.சி.ஓ) கருத்தில் கொண்டு, இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் (பி.ஐ.எஸ்) சென்னை கிளை அலுவலகம் இன்று வேலூரில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. வேலூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து காலணிகள் தொடர்புடைய 51 உற்பத்தியாளர்கள் / ஆய்வகப் பணியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
பல்வேறு காலணிகள்/காலணிகள் உதிரிபாகங்கள், தொடர்புடைய இந்திய தரநிலை விவரக்குறிப்புகள் (Indian Standard) கொண்ட தயாரிப்புகள் குறித்து இதில் விளக்கப்பட்டது. பி.ஐ.எஸ்-ன், முக்கிய செயல்பாடுகள் மற்றும் கட்டாய சான்றிதழ் குறித்து அறிமுகம் வழங்கப்பட்டது. BIS இணையதளத்தில் உள்ள பல்வேறு தகவல்கள் பற்றி பங்கேற்பாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது
இதைத் தொடர்ந்து "BIS Care" என்ற மொபைல் செயலி குறித்த செயல் விளக்கம் செய்து காணப்பட்டது. நிறைவாக பங்கேற்பாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு உரிய முறையில் தீர்வு காணப்பட்டு, நிகழ்ச்சியின் நோக்கம் நிறைவேறியது. பி.ஐ.எஸ் - சென்னை கிளை அலுவலகத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட பல்வேறு மாவட்டங்களில் வரும் வாரங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த பி.ஐ.எஸ் திட்டமிட்டுள்ளது.
இந்திய தர நிர்ணய அமைவனம், இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இந்நிறுவனம் தொழில்துறையின் நலனுக்காகவும், நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டும் தயாரிப்பு சான்றிதழ் (ஐ.எஸ்.ஐ முத்திரை), மேலாண்மை அமைப்புகள் (ISO) சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் / கலைப்பொருட்களுக்கான ஹால் மார்க்கிங் முத்திரை மற்றும் ஆய்வக சேவை போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
---
AD/PLM//KRS
(Release ID: 1968574)
Visitor Counter : 91