தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

பொதுமக்களின் குறைகளைத் திறம்படக் கையாள்வதில் கவனம் செலுத்தும் வகையில் விரிவான அடிப்படையில் சிறந்த நிர்வாகத்துடன் தூய்மை மற்றும் சிறப்பு இயக்கம் 3.0-ஐ அஞ்சல் துறை அமல்படுத்துகிறது

Posted On: 16 OCT 2023 4:40PM by PIB Chennai

மத்திய அரசின் தூய்மை மற்றும் சிறப்பு இயக்கம் 3.0 ஐ அஞ்சல் துறை 2023, அக்டோபர் 2 முதல் செயல்படுத்தி வருகிறது. சிறப்பு இயக்கம் 3.0 என்பது பொதுமக்களின் குறைகளைத் திறம்படக் கையாளுதல், நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புகள், நாடாளுமன்ற உத்தரவாதங்களைப் பின்பற்றுதல், அனைத்து அலுவலகங்களிலும் சிறப்பு இயக்கத்தின் மூலம் பணியிடத் தூய்மையை உறுதி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு விரிந்த அடிப்படையிலான சிறந்த நிர்வாக முன்முயற்சியாகும்.  குப்பை அகற்றுதல், கோப்புகளை அகற்றுதல் ஆகியவற்றைத் திறம்பட நிர்வகித்தல், இடத்தைத் தூய்மைப்படுத்தி, குடிமக்கள், பணியாளர் நலனுக்காக மாற்றுப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருதல் மற்றும் பிற முன்முயற்சிகளும் அடங்கும்.

இதுவரை  சுமார் 75,000 இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, இந்த ஆண்டு கிராமப்புற அஞ்சல் அலுவலகங்களிலும் தூய்மைப் பணிகள் நடைபெற்றன.

•42,965 பொதுமக்களின் குறைகள் (இலக்கு:72,000),  783 பொதுமக்களின் மேல்முறையீட்டு மனுக்களுக்குத் (இலக்கு:950)  தீர்வு காணப்பட்டுள்ளன.

•54,562 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, 42,736 கோப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

இந்த இயக்கத்தால் 38,593 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 64,93,042 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

தூய்மைப் பணிகளோடு பல்வேறு சிறந்த நடைமுறைகளும் மாநிலங்களில் நடைபெற்றன. பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாட்டில் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் தூய்மை விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்ற துணிப்பைகளைத் தலைமை அஞ்சல்துறை தலைவர் வழங்கினார்.

 

***

ANU/SMB/IR/AG/KPG



(Release ID: 1968185) Visitor Counter : 97