அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சந்திரயான் -3, டி.என்.ஏ தடுப்பூசியின் இரட்டை வெற்றிக் கதைகள் இந்தியாவின் அறிவியல் நிபுணத்துவத்தை உலக அளவில் நிலைநிறுத்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகிறார்.
Posted On:
11 OCT 2023 5:46PM by PIB Chennai
சந்திரயான்-3, டி.என்.ஏ தடுப்பூசியின் இரட்டை வெற்றிக் கதைகள் இந்தியாவின் அறிவியல் நிபுணத்துவத்தை உலக அளவில் நிலை நிறுத்தியுள்ளன என்றும், வளர்ந்த நாடுகள் கூட, நம்மிடமிருந்து குறிப்புகளைப் பெறுகின்றன என்றும் பிரதமர் அலுவலகத்தின் பணியாளர், மக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.
புதுதில்லியில் நடைபெற்ற இன்ஸ்பயர்- மனக் நிறுவனத்தின் 10வது தேசிய அளவிலான கண்காட்சி மற்றும் திட்டப் போட்டியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் திரு நரேந்திர மோடியின் திறமையான தலைமையின் கீழ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளைப் பொறுத்தவரை இது இந்தியாவுக்கு சிறந்த தருணம் என்று கூறினார்.
சந்திரயான் -3, ஆதித்யா எல் 1 மற்றும் கொவிட் தடுப்பூசிகளின் வெற்றிக் கதைகள் இந்தியாவின் நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட பங்களித்துள்ளன என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை வழங்கியதாக சுட்டிக்காட்டினார்.
தற்போதைய 8 பில்லியன் டாலர் பொருளாதாரத்தில் இருந்து 2040 ஆம் ஆண்டில் 40 பில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம் முன்னேறுவதற்கு முக்கிய தூண்களில் ஒன்றாக விண்வெளிப் பொருளாதாரம் உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இன்ஸ்பயர் - மனக் நிறுவனத்தின் 10-வது தேசிய அளவிலான கண்காட்சி மற்றும் திட்டப் போட்டி 2023 அக்டோபர் 9 அன்று தொடங்கப்பட்டது. இதில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 441 மாணவர்களின் புதுமையான திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
2023, அக்டோபர் 09-10, ஆகிய இரண்டு நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியில், விவசாயிகளுக்கான தொழில்நுட்பங்கள், தூய்மை மற்றும் சுகாதாரம், பெண்களுக்கான பாதுகாப்பு, தூய்மையான எரிசக்தி போன்ற தேசிய முன்னுரிமைகளில் கவனம் செலுத்தப்பட்டது. இது தற்போது பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது.
***
SM/ANU/IR/RS/KRS
(Release ID: 1966832)
Visitor Counter : 165