ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜியோ டெக்ஸ்டைல்ஸ் தரக் கட்டுப்பாடு ஆணை, 2022 நடைமுறைப்படுத்துவது 2024 ஜனவரி 1 வரை நீட்டிப்பு

प्रविष्टि तिथि: 07 OCT 2023 1:16PM by PIB Chennai

ஜியோ டெக்ஸ்டைல்ஸ் தரக் கட்டுப்பாடு உத்தரவு, 2022-க்கான அமலாக்க தேதியை நீட்டிப்பதாக மத்திய ஜவுளி அமைச்சகம் அறிவித்துள்ளது.

நடப்பு ஆண்டு அக்டோபர் 7 முதல் நடைமுறைக்கு வரவிருந்த தரக் கட்டுப்பாட்டு உத்தரவு இப்போது 2024 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 10, 2023 தேதியிட்ட அரசாணை 1706 (இ) இன் கீழ் வரும் 19 பொருட்களுக்கு இந்திய தர நிர்ணய பணியகத்தின் சான்றிதழ் செயல்முறைகள் மற்றும் அதைத் தொடர்ந்து ஜியோ டெக்ஸ்டைல்ஸ் தரக் கட்டுப்பாடு திருத்த உத்தரவு உள்ளிட்டவற்றுக்கு இணங்க நிறுவனங்கள் கால அவகாசம் கோரியதை கருத்தில் கொண்டு செயல்படுத்தும் தேதியை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.

***

ANU/PKV/BS/DL


(रिलीज़ आईडी: 1965382) आगंतुक पटल : 145
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi