மத்திய பணியாளர் தேர்வாணையம்
ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிகள் தேர்வு (II)-2023 எழுத்துத் தேர்வு முடிவு
Posted On:
03 OCT 2023 7:32PM by PIB Chennai
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 03 செப்டம்பர் 2023 அன்று நடத்திய ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிகள் தேர்வு (II) 2023 முடிவுகளின் அடிப்படையில், 6908 விண்ணப்பதாரர்கள் (i) டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் சேருவதற்காக பாதுகாப்பு அமைச்சகத்தின் சேவைகள் தேர்வு வாரியத்தால் நேர்முகத் தேர்வுக்கு தகுதிபெற்றுள்ளனர். சென்னை, எழிமலா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள பயிற்சிக்கு இவர்கள் தகுதி பெற்றுள்ளனர். இந்தப் பயிற்சி அக்டோபர், 2024 இல் தொடங்குகிறது.
தேர்வு தற்காலிகமானது என்பதுடன், தேர்வுக்கான சேர்க்கையின் நிபந்தனைகளுக்கு இணங்க, அவர்கள் வயது (பிறந்த தேதி), கல்வித் தகுதிகள், என்.சி.சி (சி) (இராணுவப் பிரிவு / மூத்த பிரிவு விமானப் பிரிவு / கடற்படை பிரிவு) போன்றவற்றுக்கு சான்றாக அசல் சான்றிதழ்களை பாதுகாப்பு அமைச்சகத்தின் (ராணுவம்) ஐ.எச்.க்யூ / டி.டி.இ ஜெனரல் ஆஃப் ஆர்.டி.ஜி (ஆர்.டி.ஜி ஏ) சி.டி.எஸ்.இ நுழைவுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் எஸ்.எஸ்.பி நேர்காணலுக்கான அழைப்பு தகவல்களைப் பெற ஏதுவாக www.joinindianarmy.nic.in ஆட்சேர்ப்பு இயக்குநரக வலைத்தளத்தில் தங்களைப் பதிவு செய்ய வேண்டும். ஆட்சேர்ப்பு இயக்கக இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முகவரி மாற்றம் ஏற்பட்டால், உடனடியாக ராணுவ தலைமையகம் / கடற்படை தலைமையகம் / விமான தலைமையகத்திற்கு நேரடியாக தெரிவிக்குமாறு வேட்பாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
*********
AD/ANU/PKV/KRS
(Release ID: 1963854)
Visitor Counter : 168