சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் காந்தி ஜெயந்தி விழா அனுசரிப்பு மற்றும் துப்புரவு பணியாளர்களை கௌரவப்படுத்தும் விழா நடைபெற்றது

Posted On: 02 OCT 2023 1:40PM by PIB Chennai

வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் இன்று 02.10.2023 மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. திரு பிமல் குமார் ஜா, வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் (பொறுப்பு) மற்றும்  அனைத்து துறை தலைவர்களும் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவர் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மகாத்மா காந்தி அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தூய்மை இந்தியா சிறப்பு விழிப்புணர்வு 3.0 திட்டத்தை முன்னிட்டு, வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் (பொறுப்பு) திரு பிமல் குமார் ஜா அவர்கள்;, திரு கே. ரவிக்குமார், தலைமை பொறியாளர் மற்றும் துறைமுக மூத்த அதிகாரிகள் முன்னிலையில் துறைமுகத்தில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் சுமார் 200 நபர்கள் கௌரவப்படுத்தப்பட்டனர்.

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில்

•    குப்பைகளை அகற்றுதல்

•    அனைத்து சுற்றுப்புற இடங்களையும் புதுப்பித்தல்

•    நெகிழி பொருட்களை பயன்படுத்துவதை தடுக்கவும் அதற்கு மாற்றாக வேறு  பொருட்களை பயன்படுத்தவும் ஊக்குவித்தல்

•    துறைமுக பள்ளிகளில் தூய்மை இயக்கம் மற்றும்  விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கும் விதமாக கழிவுகளை பிரித்தெடுப்பதின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு கற்பித்தல்

•    துறைமுக சுற்றுப்புற பகுதிகளான மருத்துவமனை, துறைமுக குடியிருப்பு பகுதி, இரயில் பாதைகள் மற்றும் சரக்கு கையாளும் கப்பல் தளங்களை  சுத்தம் செய்தல்

•    நாட்டின் சுற்றுப்புற சுகாதாரப் பயணத்தை மேம்படுத்த சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துதல்

போன்ற திட்டங்களை 01.10.2023 முதல் 31.10.2023 வரை மொத்தம் 27 நாட்களாக நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

திரு. பிமல்குமார் ஜா, வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் (பொறுப்பு) அவர்கள் தனது உரையில்; நாட்டின் தூய்மையான துறைமுகங்களுள் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையமும் ஒன்றாக திகழ்வது என்பதில் பெருமிதம் கொள்வதோடு நாம் அனைவரும் நமது வாழ்வில் தூய்மையை கடைப்பிடித்தலை கோட்பாடாக பின்பற்றுமாறு கேட்டு கொண்டார். மேலும் துறைமுகம் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருவதன் மூலம் சுற்றுப்புற சூழலை பாதுகாத்தல், சுற்றுப்புற சூழல் விதிகளுக்கு உட்படுதல், பாதுகாப்பு திறனை மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்துதல் மட்டுமல்லாமல் துறைமுகத்தில் சரக்கு கையாளுவதற்கும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

தூய்மை பாரத இந்தியா 2023 பிரச்சாரமானது குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசின் ஒன்றிணைந்த கட்டுப்பாட்டின்கீழ் ‘குப்பையில்லா இந்தியா’  என்ற தலைப்பில் ‘தூய்மை’ (ளாசயஅனயயn) இந்தியா திட்டத்தினை செயல்படுத்தியுள்ளது.

மேற்சொன்ன தகவலை வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

    

*** 

AP/DL



(Release ID: 1963186) Visitor Counter : 54


Read this release in: English