நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

வரைவு வளர்ச்சி மற்றும் கட்டிட ஒழுங்குமுறைகளை பிரபலப்படுத்த பி.ஐ.எஸ் இரண்டு நாள் பயிலரங்கை நடத்தியது

Posted On: 28 SEP 2023 6:48PM by PIB Chennai

இந்திய தேசிய தர நிர்ணய அமைப்பான, இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) செப்டம்பர் 26-27 தேதிகளில் புதுதில்லியில் தேசிய தலைநகர பிராந்தியத்திற்கான வரைவு வளர்ச்சி மற்றும் கட்டிட ஒழுங்குமுறைகள், 2022 குறித்த 2 நாள் பயிலரங்கை ஏற்பாடு செய்தது.

இந்த வரைவு வளர்ச்சி மற்றும் கட்டிட விதிமுறைகள் எளிமையான புரிதலுக்காகவும், பல விளக்கங்களுக்கு வாய்ப்பளிக்காமல் இருப்பதற்காகவும் கட்டமைக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த முறையில் தொகுக்கப்பட்டுள்ளன, மாநிலங்கள் / நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்படும்போது, சம்பந்தப்பட்ட பங்குதாரர்களால் குறிப்பாக கட்டிட வல்லுநர்கள் மற்றும் கட்டிட ஒழுங்குமுறையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளால் அவற்றை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்யும்.

இந்த பயிலரங்கில் குருகிராமின் தேசிய தலைநகரப் பகுதி (ஜி.என்.சி.டி.டி) மற்றும் தொடர்புடைய மத்திய அமைச்சகங்கள், புது தில்லி முனிசிபல் கமிட்டி, தில்லி மேம்பாட்டு ஆணையம், தில்லி மாநகராட்சி, தில்லி தீயணைப்பு சேவைகள், தொல்லியல் துறை (ஜி.என்.சி.டி.டி), குருகிராம் மாநகராட்சி, குருகிராம் பெருநகர மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்த முன்முயற்சியை வரவேற்றதுடன், ஆக்கிரமிப்பு வகையின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட கட்டிடத்திற்கு வழங்கப்பட வேண்டிய பார்க்கிங் பரப்பளவில் அதிகபட்ச வரம்பைக் குறிப்பிடுதல், இடையக மண்டலங்களின் பாதுகாவலராக இருக்கும் அதிகாரியைப் பற்றி சேர்த்தல், கட்டிடங்களில் தீ மற்றும் உயிர் பாதுகாப்புக்கான ஐஓடி அடிப்படையிலான புதிய தொழில்நுட்பங்களை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட சில பயனுள்ள ஆலோசனைகளையும் வழங்கினர்.

 

பி..எஸ் இயக்குநர் ஜெனரல் திரு. பிரமோத் குமார் திவாரி, இந்த ஆவணம் ஏற்றுக்கொள்ளப்படும்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் ஒப்புதல் செயல்முறைகளை நெறிப்படுத்தவும், பாதுகாப்பான மற்றும் நிலையான வளர்ச்சிக்கான விதிமுறைகளில் உள்ள பல்வேறு விதிகளை முறையாக செயல்படுத்துவதை உறுதி செய்யவும் உதவும் என்று கூறினார்.

***********

 

ANU/ SM /PKV/ KRS



(Release ID: 1961845) Visitor Counter : 100


Read this release in: English , Urdu , Hindi