ஆயுஷ்

ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவம் குறித்த உலகளாவிய உச்சிமாநாடு கார்பன் உமிழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த முறைகளை வகுத்துள்ளது

Posted On: 27 SEP 2023 3:31PM by PIB Chennai

ஆயுஷ் அமைச்சகம் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (எஸ்.டி.ஜி) இணைந்து, கார்பன் உமிழ்வு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்கான சுற்றுச்சூழல் நட்பு முறைகளை ஏற்றுக்கொண்டு பரப்பி வருகிறது. சமீபத்தில் குஜராத்தின் காந்திநகரில் உலக சுகாதார அமைப்பு ஆயுஷ் அமைச்சகத்துடன்  இணைந்து நடத்திய உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவம் உலகளாவிய உச்சிமாநாடு அதை தெளிவாக நிரூபித்தது. இந்த முயற்சியால் சுமார் 72,960 கிலோ கரியமில வாயு வெளியேற்றம் குறைக்கப்பட்டது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் 30,000 ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள்  தவிர்க்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உச்சிமாநாடு முற்றிலும் காகிதமற்ற, வலுவான ஆன்லைன் இருப்பைக் கொண்டிருந்தது, இதனால் போக்குவரத்து உமிழ்வை முடிந்தவரை குறைத்தது. பிளாஸ்டிக்கிற்கு பதிலாக, மட்கும் பொருட்களால் பேட்ஜ்கள் செய்யப்பட்டன. கண்காட்சி மண்டலத்தில் மறுபயன்பாட்டு பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.

உச்சிமாநாட்டில் ஒரு தனித்துவமான முன்முயற்சி காணப்பட்டது, அங்கு பிரதிநிதிகள் மற்றும் பங்கேற்பாளர்களின் பேட்ஜ்கள் மட்கும் பொருட்களால் ஆனவைமட்கும் பொருட்கள் , கண்ணாடி பாட்டில்கள்  பயன்படுத்தப்பட்டன, விமான நிலையத்தில் உள்ள அறிவிப்பு பலகைகள் பெரும்பாலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டன, சில பெரிய வெளிப்புற விளம்பர பலகைகள் வழக்கமான நடைமுறையைப் போல ஃப்ளெக்ஸில் இல்லாமல் துணியில் இருந்தன, கண்காட்சி இடத்தின் 90% உண்மையான தாவரங்கள் மற்றும் மறுபயன்பாட்டு பொருட்களின் விரிவான பயன்பாட்டுடன் மரத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்டது. உச்சிமாநாடு காகிதமில்லாதாக இருந்தது, மேலும் அனைத்து ஊடக நிகழ்வு மற்றும் தொடர்புடைய ஆவணங்களும் ஆன்லைன் தளங்கள் மற்றும் பயன்பாட்டின் மூலம் கிடைத்தன (.கா., சிற்றேடுகள் / ஃப்ளையர்கள், தகவல் கையேடுகள், மாநாட்டு திட்ட புதுப்பிப்புகள் போன்றவை). இத்தகைய முன்முயற்சிகள் நீண்ட காலத்திற்கு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், கார்பன் உமிழ்வைக் குறைக்க எடுக்கப்படும் முன்முயற்சிகள் இதுபோன்ற பிற பெரிய அளவிலான நிகழ்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் என்றும் அமைச்சகம் கருதுகிறது.

இந்த மாநாட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்று, ஆன்லைனில் இருப்பது, அதன் மூலம் பயணத்தின் தேவையைக் குறைப்பதாகும். மொத்தத்தில், உச்சிமாநாட்டின் 6,046 ஸ்ட்ரீம்கள் ஆன்லைனில், நேரடி மற்றும் வீடியோ / பதிவுகள் உள்ளன, இது பங்கேற்பாளர்கள் / பயணங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்துள்ளது. கணிசமான அளவு கார்பன் உமிழ்வு தவிர்க்கப்பட்டதால், இந்த முயற்சி பலனளித்தது.

ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பின் முயற்சிகள் ஜி 20 புது தில்லி தலைவர்கள் பிரகடனத்துடன் இணைந்துள்ளன, இது நூற்றாண்டின் நடுப்பகுதியில் அல்லது அதைச் சுற்றியுள்ள உலகளாவிய நிகர பூஜ்ஜிய உமிழ்வு / கார்பன் நடுநிலையை அடைவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது.

***

 

(வெளியீட்டு ஐடி: 1961227)

 

ANU/AP/PKV/KRS



(Release ID: 1961462) Visitor Counter : 67


Read this release in: English , Urdu , Hindi