பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரஷ்யாவில் பயங்கரவாத எதிர்ப்பு களப்பயிற்சி 2023 ல் பங்கேற்க இந்திய ராணுவக் குழு புறப்பட்டது

प्रविष्टि तिथि: 23 SEP 2023 10:38AM by PIB Chennai

2023 செப்டம்பர் 25 முதல் 30 வரை ரஷ்யாவில் நடைபெறவிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு களப் பயிற்சி (எஃப்.டி.எக்ஸ்) 2023 குறித்த ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் (ஏ.டி.எம்.எம்) மற்றும் நிபுணர் பணிக் குழு (ஈ.டபிள்யூ.ஜி) ஆகியவற்றுக்காக ராஜபுதன ரைபிள்ஸுடன் இணைக்கப்பட்ட பட்டாலியனைச் சேர்ந்த 32 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவக் குழு புறப்பட்டது. மியான்மருடன் இணைந்து ஈ.டபிள்யூ.ஜி.யின் இணைத் தலைவராக ரஷ்யா நடத்தும் பன்னாட்டு கூட்டு ராணுவப் பயிற்சி இதுவாகும். இதற்கு முன்னதாக 2023 ஆகஸ்ட் 2 முதல் 4 வரை மியான்மரின் நே பை டாவில் பயங்கரவாத எதிர்ப்பு குறித்த ஏ.டி.எம்.எம் பிளஸ் ஈ.டபிள்யூ.ஜி.யின் பயிற்சி நடைபெற்றது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) நாடுகளிடையே உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை அனுமதிக்க 2017 முதல், ஏடிஎம்எம் பிளஸ் ஆண்டுதோறும் கூடுகிறது. தொடக்க ஏடிஎம்எம் பிளஸ் 12அக்டோபர் 2010 அன்று வியட்நாமின் ஹா நொய்யில் கூட்டப்பட்டது. இந்த ஆண்டு ஆசியான் உறுப்பு நாடுகளும், பிளஸ் குழுமமும் இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றன.

இந்தப் பயிற்சியில்  பாதுகாப்பு நிறைந்த பல பகுதியில் உள்ள பயங்கரவாதக் குழுக்களை அழிப்பது உள்ளிட்ட பல பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சிகள் இடம்பெறும். பயங்கரவாத எதிர்ப்புத் துறையில் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும் ஊக்குவிப்பதும் இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.

பயங்கரவாத எதிர்ப்பு 2023 குறித்த ஏடிஎம்எம் பிளஸ் ஈடபிள்யூஜி இந்திய ராணுவத்திற்கு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில்  நிபுணத்துவம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான தளத்தை வழங்கும், மேலும் பங்கேற்கும் மற்ற 12 நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்கும். இந்த பயிற்சியின் மூலம் வளமான தொழில்முறை அனுபவத்தை இந்திய ராணுவம் எதிர்பார்க்கிறது.

***

ANU/AP/PKV/DL


(रिलीज़ आईडी: 1959869) आगंतुक पटल : 218
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी , Telugu