அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சி.எஸ்.ஐ.ஆர் - ஐ.ஜி.ஐ.பி மற்றும் கே.ஏ.எம்.பி 1100 மாணவர்களுடன் "ஒரு வாரம் ஒரு ஆய்வகம்" விழாவை கொண்டாடியது

Posted On: 22 SEP 2023 4:37PM by PIB Chennai

சி.எஸ்.ஐ.ஆர் - ஐ.ஜி.ஐ.பி (அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் மரபணுவியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம்) மற்றும் சி.எஸ்.ஐ.ஆர் - என்.ஐ.எஸ்.சி.பி.ஆர் மற்றும் என்.சி.பி.எல் ஆகியவற்றின் முன்முயற்சியான கே.ஏ.எம்.பி (அறிவு மற்றும் விழிப்புணர்வு உருவாக்க தளம்) ஆகியவை "ஒரு வாரம் ஒரு ஆய்வகம்" கொண்டாட்டத்தின் போது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியை நடத்தின. இந்நிகழ்வில் 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையான 1100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.ஜி.ஐ.பியில் "ஒரு வாரம் ஒரு ஆய்வகம்" விழாவின் ஒரு பகுதியாக, மதுரா சாலை மற்றும் மால் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.ஜி.ஐ.பி வளாகங்களில் அறிவியல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.ஜி.ஐ.பி இயக்குநர் டாக்டர் சவுவிக் மைதி மாணவர்களை வரவேற்றார், மேலும் ஆய்வகத்தைப் பார்வையிட்டு  தங்கள் நண்பர்கள்  மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவியல் தொடர்பான தகவல்களை  பரப்ப   ஊக்குவித்தார். இந்த நிகழ்வின் போது, சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.ஜி.ஐ.பியின் திட்ட விஞ்ஞானி திருமதி பூர்தி, சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.ஜி.ஐ.பி மதுரா சாலை வளாகத்தில் "ராமானுஜன்-ஹார்டி ஆய்வகம்" என்ற அதிநவீன ஆய்வகத்தை திறந்து வைத்தார்.

 

சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.ஜி.ஐ.பி மற்றும் கே.ஏ.எம்.பி பற்றி:

 

சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.ஜி.ஐ.பி, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்-மரபணுவியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம் (ஐ.ஜி.ஐ.பி), முதன்மையாக உயிரியல் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தும் ஒரு மதிப்புமிக்க அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமாகும். இது மரபியல், மூலக்கூறு மருத்துவம், உயிர் தகவலியல் மற்றும் புரோட்டியோமிக்ஸ் தொடர்பான தேசிய ஆராய்ச்சி முயற்சிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

<><><><><>

 

(Release ID: 1959680)

ANU/AP/PLM/KV/KRS
 



(Release ID: 1959753) Visitor Counter : 101


Read this release in: English , Urdu , Hindi