வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

தூய்மையை நோக்கி புதுமையான பயணத்தைத் தொடங்குகிறது அகமதாபாத்

Posted On: 22 SEP 2023 2:44PM by PIB Chennai

தூய்மை  இருவார விழா 2023 இன் கீழ் அகமதாபாத் மாநகராட்சி நகரத்தில் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு புதுமையான பயணத்தைத் தொடங்கியது. அகமதாபாத்தில் தூய்மை மற்றும் கழிவு மேலாண்மை கலாச்சாரத்தை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ஆக்கபூர்வமான முயற்சியான 'தூய்மை  ரயில்' முன்முயற்சி ஒரு  புத்திசாலித்தனமான அணுகுமுறையாகும்.

'தூய்மை ரயில்' முன்முயற்சி பல நோக்கங்களை அடைவதை நோக்கமாகக் கொண்டது. முதலாவதாக, நகரத்தில் கழிவு மேலாண்மை மற்றும் தூய்மையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்த முயல்கிறது. இதை அடைய, குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை ஒரு ஆழமான மற்றும் சுவாரஸ்யமான அனுபவத்தின் மூலம் ஈடுபடுத்தவும் கற்பிக்கவும் மாநகராட்சி  முடிவு செய்தது   .

'தூய்மை ரயில்' ஒரு மகிழ்ச்சியான மற்றும் தகவலறிந்த சவாரியாகும், இது பயணிகளை கங்காரியா ஏரி முகப்பிற்கு ஒரு அழகிய பயணத்திற்கு அழைத்துச் சென்றது.  ரயில் பயணத்தின் போது, பயணிகள் கவர்ச்சிகரமான காட்சிகள் மற்றும் விளக்கக்காட்சிகள் மூலம் கழிவு மேலாண்மையைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பைப் பெற்றனர். இந்த கல்வி கூறுகள் கற்றல் அனுபவத்தை சுவாரஸ்யமாகவும் மறக்க முடியாததாகவும் மாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளன.

'தூய்மை ரயில்' முன்முயற்சியின் மிகவும் புதுமையான அம்சங்களில் ஒன்று சிறப்பாக வடிவமைக்கப்பட்ட செய்திகள். பயணிகளுக்கு கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்து பயனுள்ள செய்திகளைக் கொண்ட தட்டுகள் மற்றும் கைத்தடிகள் வழங்கப்பட்டன. இந்த தனித்துவமான மற்றும் உறுதியான நினைவூட்டல்கள் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கவும், பொறுப்புணர்வை ஊக்குவிக்கவும் உதவின.

தூய்மை மற்றும் கழிவு மேலாண்மையை ஊக்குவிப்பதில் புதுமைக்கான அகமதாபாத் மாநகராட்சியின்  அசைக்க முடியாத அர்ப்பணிப்பை 'தூய்மை     ரயில்' முன்முயற்சி பிரதிபலித்தது. இது அகமதாபாத்தில் தூய்மையின் நோக்கத்தை முன்னெடுப்பதற்கான அவர்களின் ஆக்கபூர்வமான மற்றும் கற்பனை அணுகுமுறையை வெளிப்படுத்தியது. பொதுமக்கள் முழு மனதுடன் இந்த முயற்சியை ஏற்றுக்கொண்டு பங்கேற்றனர்.

'தூய்மை ரயில்' முயற்சியின் தாக்கம் குறிப்பிடத்தக்கது. இது குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே கழிவு மேலாண்மை மற்றும் தூய்மையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை கணிசமாக அதிகரித்துள்ளது. தூய்மை இந்தியா இயக்கம் நகர்ப்புறம் 2.0 இன் ஒட்டுமொத்தப் பணியில் பங்களித்து, பயணிகள் கல்விப் பொருட்களுடன் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த முன்முயற்சி நகரவாசிகள் மற்றும் பார்வையாளர்களிடையே ஒரு பொறுப்புணர்வை வளர்த்தது, கழிவு மேலாண்மையில் செயலூக்கமான பங்கை எடுக்க அவர்களை ஊக்குவித்தது. மிக முக்கியமாக, இது புதுமையின் பிரகாசமான எடுத்துக்காட்டாக நின்றது, தூய்மையை மேம்படுத்த ஆக்கபூர்வமான வழிகளைத் தேடும் பிற நகரங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தது.

அகமதாபாத் மாநகராட்சியின் ஐ.எஸ்.எல் 2.0 இன் கீழ் ' தூய்மை ரயில்' முன்முயற்சி தூய்மையை ஊக்குவிக்க கற்பனை, கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றலை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் காட்டுகிறது. இந்த உருமாற்றத் திட்டம் விழிப்புணர்வை அதிகரிப்பது மட்டுமல்லாமல், தூய்மையான மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புள்ள அகமதாபாத் தேடலில் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை தீவிரமாக ஈடுபடுத்துகிறது. நமது சமூகங்களில் அர்த்தமுள்ள மற்றும் நீடித்த மாற்றத்தைக் கொண்டு வருவதில் புதுமையான முறைகளின் செயல்திறனுக்கு இது ஒரு சான்றாக நிற்கிறது.

**

ANU/AP/PKV/KPG

 



(Release ID: 1959707) Visitor Counter : 110


Read this release in: English , Urdu , Hindi , Gujarati