பாதுகாப்பு அமைச்சகம்
முப்படைகளின் தலைமை தளபதி செப்டம்பர் 21 அன்று மத்திய சேவை மேம்பாட்டு அமைப்புக்கு வருகை
प्रविष्टि तिथि:
21 SEP 2023 6:26PM by PIB Chennai
முப்படைகளின் தலைமை தளபதி (சிடிஎஸ்) ஜெனரல் அனில் சௌகான் செப்டம்பர் 21 அன்று புதுதில்லியில் உள்ள மத்திய சேவை மேம்பாட்டு அமைப்புக்கு வருகை தந்தார். அவரை ஏர் மார்ஷல் சி ஆர் மோகன் வரவேற்றார். சி.எஸ்.டி.ஓ என்பது இந்திய விமானப்படையின் பராமரிப்பு தத்துவங்களை உருவாக்கும் பொறுப்பு கொண்ட ஒரு முதன்மை நிறுவனமாகும்.
இந்தப் பயணத்தின் போது, தானியங்கி சரக்கு மேலாண்மைக்கான ஒருங்கிணைந்த பொருள் மேலாண்மை ஆன்லைன் அமைப்பு (ஐ.எம்.எம்.ஓ.எல்.எஸ்), பராமரிப்பு மேலாண்மைக்கான மின்னணு பராமரிப்பு மேலாண்மை அமைப்பு (இ-எம்.எம்.எஸ்) ஆகிய இரண்டு முக்கியமான நிறுவன வள திட்டமிடல் (ஈ.ஆர்.பி) மென்பொருளின் திறன்கள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது.
டிஜிட்டல் இந்தியாவை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இரண்டு ஈ.ஆர்.பி.க்களின் விரிவாக்கத்தை சி.டி.எஸ் பாராட்டினார். ஒருங்கிணைந்த பராமரிப்பு மற்றும் சரக்கு மேலாண்மைக்காக மூன்று சேவைகளுக்கும் இடையில் இரண்டு ஈ.ஆர்.பி.களையும் விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
ID=1959466
***
AD/ANU/PKV/ KRS
(रिलीज़ आईडी: 1959520)
आगंतुक पटल : 394