சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல்துறையும்அகமதாபாத்தில்உள்ள இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து 3000 மாற்றுத் திறனாளிகள் தொழில் தொடங்குவதற்கான திட்டங்களுக்குஉதவுகின்றன
प्रविष्टि तिथि:
21 SEP 2023 4:53PM by PIB Chennai
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனமும் (ஈ.டி.ஐ.ஐ), மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையும் இணைந்து (டி.இ.பி.டபிள்யூ.டி) பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளின் கீழ் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வட்டமேஜை மாநாட்டை நடத்தின.
மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், ஈ.டி.ஐ.ஐ இயக்குநர் ஜெனரல் டாக்டர் சுனில் சுக்லா, முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் இது தொடர்பான விழாவில் கலந்து கொண்டனர். 1500 தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள், 1500 பொது நிறுவனங்கள் உட்பட மாற்றுத் திறனாளிகளால் 3000 புதிய தொழில் நிறுவனங்களை நிறுவுவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான செயல்திட்டங்கள் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
3000 மாற்றுத் திறனாளிகள் தலைமையில் நிறுவனங்களை உருவாக்கும் இலக்கை அடைவது தொடர்பான செயல் திட்டங்கள் இதில் வகுக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய மாற்றுத்தினாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பல சவால்கள் உள்ளன என்று கூறினார். மாற்றுத் திறனாளிகள் மீது சமூகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்களையும் அவர் எடுத்துரைத்தார்.
மாற்றுத் திறனாளிகளின் திறன் மேம்பாட்டிற்கான தேசிய செயல் திட்டங்கள் குறித்து மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை துணை இயக்குநர் திரு கிஷோர் பி. சுர்வாடே விளக்கினார்.
மாற்றுத் திறனாளிகளின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புக்காக புதிதாக தொடங்கப்பட்ட டி.இ.பி.டபிள்யூ.டி பி.எம் தக்ஷ் போர்ட்டலின் அம்சங்களை விளக்கும் வீடியோ திரையிடப்பட்டது.
டாக்டர் சுனில் சுக்லா கூறுகையில், "ஒரு சமூகமாக, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டிய நேரம் இது, இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பது நமது முன்னுரிமையில் அதிகமாக இருக்க வேண்டும். நிலையான தொழில் வாய்ப்புகள், தொழில் முனைவோர் வாய்ப்புகளை உருவாக்குவதுடன், மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய பயிற்சியும், கையடக்க வசதியும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து மட்டங்களிலும் சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தை வளர்ப்பதற்கு பணியிடங்களிலும் சமூக கட்டமைப்பின் பல்வேறு மட்டங்களிலும் சிறந்த நடைமுறைகளை நிறுவுவதும் முக்கியம்.
டாக்டர் ராமன் குஜ்ரால், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதித்து, 266 திறன் பயிற்சித் திட்டங்கள் மூலம் இதுவரை 8,533 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர், இது 1,247 நிறுவனங்களை நிறுவ வழிவகுத்துள்ளது என்றார். சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, சமூகப் பாதுகாப்பு இயக்குநரகம், குஜராத் மாநில ஊனமுற்றோர் (மாற்றுத் திறனாளிகள்) நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், குஜராத் அரசின் ஆதரவுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் மையம் (சி.இ.டி.ஏ) அதன் வளாகத்தில் உள்ளது.
மாநாட்டு அறையில் இருந்த அதிகாரிகளுக்கும் கார்ப்பரேட் தலைவர்களுக்கும் இடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒரு மணி நேரம் நடந்த வட்டமேஜை விவாதத்தில் அணுகல், உதவி மற்றும் உதவி சாதனங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான
செயற்கை நுண்ணறிவு, வேலை வரைபடம், தொழில்முனைவோர் வாய்ப்புகள் மற்றும் ஊனமுற்றோர் உணர்திறன் தொடர்பான தலைப்புகள் அடங்கும்.
***
AD/ANU/PLM/RS/GK
(रिलीज़ आईडी: 1959457)
आगंतुक पटल : 180