சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

56-வது தேசிய பொறியாளர் தின கொண்டாட்டம்

Posted On: 18 SEP 2023 8:24PM by PIB Chennai

இந்தியாவின் தலைசிறந்த பொறியாளர்களில் ஒருவரான பாரத ரத்னா விஸ்வேஸ்வரய்யாவின் 163-வது பிறந்தநாளில்  56-வது தேசிய பொறியாளர் தினம் திருச்சிராப்பள்ளியில் உள்ள  இந்திய பொறியியல் கழக மையம் சார்பில் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் என்.கோபாலசுவாமி முதன்மை விருந்தினராகப் பங்கேற்று, சிறந்த பொறியாளர் விருது – 2023-ஐ இந்திய பொறியியல் கழகத்தின் திருச்சி மைய முன்னாள் தலைவரும்,  பெல் நிறுவனத்தின் முன்னாள்  கூடுதல் பொது மேலாளருமான  டாக்டர் எஸ். கருப்பசாமிக்கு வழங்கினார்.

இந்திய பொறியியல் கழகத்தின் திருச்சி மையத்திலும்பெல் நிறுவனத்திலும் அவர் ஆற்றியை சிறந்த சேவைகளைப் பாராட்டி விருது வழங்கினார். அவர் தனது உரையில், கட்டுமானத்தில் பயன்படுத்துவதற்கு அதிக மீள் மற்றும் பாதுகாப்பான புதிய பொருட்களைப் புதுமைப்படுத்தவும் கண்டுபிடிக்கவும் பொறியாளர்களுக்கு வலியுறுத்தினார்.

டாக்டர்.எஸ். கருப்பசாமி தனது ஏற்புரையில், ஆண், பெண், பறவைகள், விலங்குகள் மற்றும் இயற்கையின் இறைவனின் படைப்பு மிகவும் பரிபூரணமாகவும், தனித்துவமாகவும் இருப்பதால், வளர்ந்து வரும் பொறியாளர்களாகிய நாம், நமது உயர் திறன் மற்றும் பொறியியல் கல்வி மூலம் அற்புதமான விஷயங்களை உருவாக்க வேண்டும் என்றும், இது சமூகத்திற்கு நன்மை பயக்கும் என்றும் குறிப்பிட்டார்.

விழாவிற்கு முன்னாள் தலைவர் ஆர்.செல்வராஜ் தலைமை வகித்து வரவேற்றார். சாரநாதன் பொறியியல் கல்லூரி பேராசிரியர் டாக்டர் எஸ்.ரவி மாறன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த டாக்டர். கெவின் ஆர்க் குமார் நன்றியுரை வழங்கினார். என்ஐடிடி, பெல், இந்திய பொறியியல் கழக உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

***

SM/IR/RS/KRS


(Release ID: 1958638) Visitor Counter : 115
Read this release in: English