குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவம் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையுடன் மக்களை மையமாகக் கொண்டதாக அமைந்துள்ளது: குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்

Posted On: 18 SEP 2023 6:05PM by PIB Chennai

புதுதில்லியில் ஜி 20 தலைவர்கள் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான திரு ஜக்தீப் தன்கர் இன்று நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். உச்சிமாநாட்டின் விளைவுகள் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பாராட்டியுள்ள அவர், இது வரவிருக்கும் ஆண்டுகளில் உலக ஒழுங்கை மறுவடிவமைக்க உதவும் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

மாநிலங்களவையின் 261-வது அமர்வின் தொடக்கத்தில் அவையில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், ஜி 20-ல் இந்தியாவின் தலைமைத்துவம் உலக அரங்கில் நாட்டின் மதிப்பை உயர்த்தியுள்ளது என்று கூறினார். இந்த தலைமைத்துவத்தும் 'அனைவரையும் உள்ளடக்கியது, லட்சியம் நிறைந்தது மற்றும் மக்களை மையமாகக் கொண்டது என்று  அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஜி 20 தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அதை 'மக்கள் ஜி 20' ஆக மாற்றிய தொலைநோக்குப் பார்வைக்கு தமது பாராட்டுகளை அவர் தெரிவித்தார்.

ஒருமனதாகவும் ஒருமித்த கருத்துடனும் ஏற்றுக்கொள்ளப்பட்ட புது தில்லி ஜி 20 தலைவர்களின் பிரகடனம் குறித்து கருத்துத் தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவர்இந்தியாவுக்கான உலகளாவிய அங்கீகாரத்தை சுட்டிக் காட்டினார். பிளவுகள் நிறைந்த உலகில் அமைதி மற்றும் நிதானத்தின் குரலாக இந்தியாவை இந்த பிரகடனம் அங்கீகரித்துள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் தெரிவித்தார்.

இந்தியா-மத்திய கிழக்கு- ஐரோப்பா பொருளாதார வழித்தடம் மற்றும் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி குறித்து குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், இதுபோன்ற பல முன்முயற்சிகள் குறித்து கவனத்தை ஈர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். உலகளாவிய தென்பகுதி நாடுகளின் குரலை ஜி 20 விவாதங்களில் கொண்டு வருவதில் இந்தியாவின் தலைமைத்துவம் முக்கிய பங்கு வகித்ததையும் அவர் எடுத்துரைத்தார். ஜி 20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சியின் விளைவாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஜி 20-ன் கவனம் பொருளாதாரத்தை மட்டுமே மையமாகக் கொண்ட அணுகுமுறையிலிருந்து மிகவும் பரந்த அணுகுமுறைக்கு மாறியுள்ளது என்று குடியரசுத் துணைத் தலைவர் சுட்டிக்காட்டினார். நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கும், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை நிறுவுவதற்கும், பசுமை மேம்பாட்டு ஒப்பந்தத்தை ஊக்குவிப்பதற்கும், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டினார். வரவிருக்கும் நாடாளுமன்றம் -20 மாநாட்டைக் கருத்தில் கொண்டு, 'வசுதைவ குடும்பகம்- ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற கருப்பொருளைக் கட்டமைப்பதில் அவை உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் அழைப்பு விடுத்தார்.

****

Release ID: 1958577

ANU/SM/PLM/KRS



(Release ID: 1958633) Visitor Counter : 141


Read this release in: English , Urdu , Hindi , Malayalam