அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சி.எஸ்.ஐ.ஆர்-என்.ஐ.எஸ்.சி.பி.ஆரின் ஒரு வாரம் ஒரு ஆய்வகம் திட்டம்
Posted On:
16 SEP 2023 4:59PM by PIB Chennai
சி.எஸ்.ஐ.ஆர்-தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (சி.எஸ்.ஐ.ஆர்-என்.ஐ.எஸ்.சி.பி.ஆர்) செப்டம்பர் 11, 2023 அன்று தொடங்கிய அதன் மிகவும் வெற்றிகரமான "ஒரு வாரம் ஒரு ஆய்வகம் (ஓ.டபிள்யூ.ஓ.எல்)" திட்டத்தை நிறைவு செய்துள்ளது. இந்த ஒரு வார கால நிகழ்ச்சியின் நிறைவு விழா இன்று செப்டம்பர் 16, 2023 அன்று புதுதில்லியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்-என்.ஐ.எஸ்.சி.பி.ஆரின் விவேகானந்தா மண்டபத்தில் நடைபெற்றது.
ஒரு வாரம் ஒரு ஆய்வகம் திட்டத்தின் போது, சி.எஸ்.ஐ.ஆர்-என்.ஐ.எஸ்.சி.பி.ஆர் இந்தியாவின் ஸ்டார்ட்அப் புரட்சி: யோசனை முதல் சந்தை வரை, கிராமப்புற வளர்ச்சிக்கான அடித்தட்டு அளவில் கண்டுபிடிப்பு, திறன் மேம்பாட்டு மாநாடு, அறிவியல் தகவல்தொடர்பு பட்டறை, மாணவர்-அறிவியல் இணைப்பு, அறிவியல் தகவல்தொடர்பு: அறிவியலுடன் பொது ஈடுபாடு, அறிவியல் அறிவு மாநாடு, அறிவியல் கொள்கை ஆகிய 9 முக்கிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சியின் போது, என்.ஐ.எஸ்.சி.பி.ஆர் அதன் முக்கிய பங்குதாரர்களான அறிவியல் கொள்கை வகுப்பாளர்கள், இராஜதந்திரிகள், அறிவியல் தகவல் தொடர்பாளர்கள், விஞ்ஞானிகள், தொழில்துறை, கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முனைவோர், ஸ்டார்ட்அப்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அறிவியல் வெளியீட்டாளர்கள் போன்றவர்களை அழைத்து, என்.ஐ.எஸ்.சி.பி.ஆரின் புதிய முயற்சிகள் மற்றும் சாதனைகளை காட்சிப்படுத்தியது.
ஐந்தாம் நாள் அறிவியல் அறிவு மாநாட்டு நிகழ்வில், எழுத்தாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் கலந்துரையாடல் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பல புகழ்பெற்ற அறிவியல் பதிப்பாளர்கள் பங்கேற்று, தங்கள் அரங்குகளை அமைத்திருந்தனர். ஆழமான விளக்கக்காட்சிகள் மற்றும் விவாதங்கள் நிறைந்த இந்த வாரத்தின் நிறைவு விழா பொருத்தமான முடிவாக அமைந்தது.
***
ANU/AD/PKV/DL
(Release ID: 1958076)
Visitor Counter : 158