அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

"புரத அறிவியலின் பல்வேறு அம்சங்கள்" ஐஜேபிபி சிறப்பு இதழ் வெளியிடப்பட்டது

Posted On: 16 SEP 2023 3:29PM by PIB Chennai

உயிர் வேதியியல் மற்றும் உயிர் இயற்பியலுக்கான (ஐஜேபிபி) இந்தியன் ஜர்னல், புதுதில்லியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர் -தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் , வதோதராவின் பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் உயிர் வேதியியல் துறையுடன் இணைந்து ஒரு சிறப்பு மலரை வெளியிட்டுள்ளது.

 

இந்தியச் சூழலில்."புரத அறிவியலின் பன்முக அம்சங்கள்" என்ற தலைப்பில் இந்த சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வெளியீடு செப்டம்பர் 2023 ஐஜேபிபி தொகுதி 60 வெளியீடு எண் 9  இல் 8 அசல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் 4 மதிப்பாய்வு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

 

புகழ்பெற்ற தேசிய, சர்வதேச வல்லுநர்களைக் கொண்ட ஆசிரியர் குழுவின் திறமையான வழிகாட்டுதல் மற்றும் செயலூக்கமான ஆதரவுடன் இந்த இதழ் உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களிடமிருந்து கணிசமான கவனத்தைப் பெற்று வருகிறது.

***

ANU/AP/BS/DL


(Release ID: 1958073) Visitor Counter : 159
Read this release in: Urdu , Hindi , English