அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்கும் பொதுவான ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்கள் குறித்த கருத்தாய்வு நிறைவு

Posted On: 16 SEP 2023 11:28AM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையின் பொதுவான ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்கள்(CRTDH) திட்டத்தின் கீழான நான்காவது  கருத்தாய்வு, புவனேஸ்வரில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்- கனிமங்கள் மற்றும் பொருட்கள் தொழில்நுட்ப நிறுவனத்தில் நிறைவடைந்தது.

 

மாற்றத்துக்கான ஆராய்ச்சியை வலுப்படுத்தவும், தொழில்துறை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை எளிதாக்கவும், அறிவியல் அறிவு, யோசனைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் மற்றும் சந்தைப்படுத்தக்கூடிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் வடிவத்தில் அவற்றின் நடைமுறை பயன்பாடு ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க உகந்த சூழலை உருவாக்கவும் இந்த கருத்தாய்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

 

இந்தக் கருத்தாய்வை  டி.எஸ்.ஐ.ஆரின் விஞ்ஞானி-ஜி மற்றும் சி.ஆர்.டி.டி.எச் தலைவர் டாக்டர் சுஜாதா சக்லனோபிஸ், புவனேஸ்வரில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.எம்.எம்.டி இயக்குநர் டாக்டர் ராமானுஜ் நாராயண் மற்றும் ஏ.சி.எஸ்.ஐ.ஆர் இயக்குநர் பேராசிரியர் மனோஜ் கே.தார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

 

டாக்டர் சுஜாதா சக்லானோபிஸ் தனது தொடக்க உரையில், "தற்சார்பு இந்தியா" திட்டத்தின் ஒரு பகுதியாக கருத்தாய்வு நடைபெறுகிறது என்றார். “ஆத்மநிர்பர் பாரத்” உத்தியின் கீழ் ஸ்டார்ட்அப் இந்தியா, மேக் இன் இந்தியா மற்றும் ஸ்கில் இந்தியா போன்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் முன்முயற்சிகளை நிறைவேற்றுதற்கான படிக்கட்டுகளாகும் என்றும் குறிப்பிட்டார்.

 

இந்தக் கருத்தாய்வில்  தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழில் சங்கங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (எம்.எஸ்.எம்.இ) பிரதிநிதிகள், ஸ்டார்ட்அப்கள், தனிப்பட்ட கண்டுபிடிப்பாளர்கள், சுய உதவிக் குழுக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

***

ANU/AP/BS/DL



(Release ID: 1957962) Visitor Counter : 97


Read this release in: English , Urdu , Hindi