விவசாயத்துறை அமைச்சகம்

நெல் விதைப்பு பரப்பு 409 லட்சம் ஹெக்டேரைக் கடந்துள்ளது

Posted On: 15 SEP 2023 1:23PM by PIB Chennai

2023  செப்டம்பர் 15 நிலவரப்படி கரீப் பயிர்களின் பரப்பளவு அதிகரிப்பை வேளாண்  மற்றும் விவசாயிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது.

நெற்பயிர் 409.41 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 398.58 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டது.

பயறு வகைகள் 121 லட்சம் ஹெக்டேரிலும், சிறுதானியங்கள் 183.11 லட்சம் ஹெக்டேரிலும், எண்ணெய் வித்துக்கள் 192.20 லட்சம் ஹெக்டேரிலும், கரும்பு 59.91 லட்சம் ஹெக்டேரிலும் பயிரிடப்பட்டுள்ளன. சணல் 6.5 லட்சம் ஹெக்டேரிலும், பருத்தி 123.22 லட்சம் ஹெக்டேரிலும் பயிரிடப்பட்டுள்ளன.

இந்த புள்ளி விவரத்தின் படி 1095 லட்சம்  ஹெக்டேர் பரப்பில் கரீஃப் பருவ பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1957620

***

ANU/SM/SMB/AG/GK



(Release ID: 1957747) Visitor Counter : 96