சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
56வது பொறியாளர் தினம் புதுச்சேரி தொழில்நுட்பக் கல்லுரியில் கொண்டாடப்பட்டது
Posted On:
15 SEP 2023 4:48PM by PIB Chennai
காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் சார்பில் புதுச்சேரியில் 56-வது பொறியாளர் தினம் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கி. ரா. ஆடிட்டோரியத்தில் இன்று (15.09.2023) கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய Er. பி. பழனியப்பன், பொதுப்பணித்துறை (புதுச்சேரி) அவர்கள் இந்த உலகத்தை வாழ்வதற்கு சிறந்த இடமாக மாற்றக்கூடிய வெற்றிகரமான தொழில்நுட்ப வல்லுநர்களாக மாறவேண்டுமென மாணவர்களை வலியுறுத்தினார்.
- முக்கிய விருந்தினரும், கழகத்தின் பதிவாளருமான முனைவர் சீ. சுந்தரவரதன் குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தார். மேலும் இவ்விழாவில் கெளரவ விருந்தினர்களாக ஐஇ(ஐ) புதுச்சேரி மாநில மையத்தின் தலைவர் முனைவர். பி. ராஜாராம், புதுச்சேரி மாநில மையத்தின் செயலாளர் முனைவர். எஸ். திருஞானம் ஆகியோர் இணையம் வாயிலாக கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் இறுதியாக பொறியாளர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
K1PJ.jpg)
***
(Release ID: 1957730)
Visitor Counter : 104