வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஆசிய வளர்ச்சி வங்கியின் 2023 பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு மாநாட்டில் பிரதமரின் விரைவு சக்தி தேசியப் பெருந்திட்டத்தை இந்தியா காட்சிப்படுத்தியது

Posted On: 07 SEP 2023 6:35PM by PIB Chennai

ஜார்ஜியாவின் டிபிலிசியில் ஆசிய வளர்ச்சி வங்கி ஏற்பாடு செய்த '2023 பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு மாநாடு: பொருளாதார வழித்தட மேம்பாடு மூலம் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல்' நிகழ்ச்சியில் பிரதமரின்  விரைவு சக்தி தேசியப் பெருந்திட்டத்தை  இந்தியா காட்சிப்படுத்தியது. 2023 செப்டம்பர் 5 முதல் 7 வரை நடைபெற்ற இந்த மாநாட்டில், பொருளாதார வழித்தட மேம்பாட்டிற்குப் பொறுப்பான ஆசிய வளர்ச்சி வங்கியின் வளரும் உறுப்பு நாடுகளின் மூத்த அதிகாரிகள், வளர்ச்சிப் பங்காளர்  முகமைகள், பிராந்திய ஒத்துழைப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட 30 க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளின் பங்கேற்பு இருந்தது.

 

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை சிறப்பு செயலாளர் (பொருள் போக்குவரத்து) திருமதி சுமிதா தவ்ரா தலைமையில்  இந்திய தூதுக்குழு பங்கேற்றது.

 

இடஞ்சார்ந்த மாற்றம் / பகுதியை மையமாகக் கொண்ட அணுகுமுறையை பொருளாதார வழித்தட மேம்பாட்டுடன் ஒருங்கிணைப்பதற்கான வழிகளை ஆராய்வதும், பரந்த அணுகுமுறை மூலம் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும் ; முதலீடு செய்யக்கூடிய திட்டங்களில் பொருளாதார வழித்தட மேம்பாட்டுக்  கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு வழிகாட்டுதல்களைப் பயன்படுத்துவது குறித்த அறிவு பகிர்வு ஆகியவை .மாநாட்டின் நோக்கமாகும்

 

பிரதமரின் விரைவு சக்தி - பன்முக இணைப்புக்கான தேசியப் பெருந்திட்டம், இந்தியத் தயாரிப்பு  முன்முயற்சி, பொருளாதார முனையங்கள் மற்றும் சமூக உள்கட்டமைப்புடன் பன்முக உள்கட்டமைப்பு இணைப்பை ஒருங்கிணைத்து திட்டமிடுவதற்கான ஒரு உருமாற்றம் தரும் 'முழு அரசு' அணுகுமுறை ஆகியவை தளவாட செயல்திறனை மேம்படுத்துகிறது என்று திருமதி தவ்ரா மாநாட்டில் தெரிவித்தார். பிரதமரின் விரைவு சக்திக் கொள்கைகள் பிராந்திய இணைப்பின் ஒரு பகுதியாக சமூக-பொருளாதார பகுதி அடிப்படையிலான வளர்ச்சியைக் கொண்டு வருகின்றன. ஒட்டுமொத்த தளவாடங்கள் மற்றும் உள்கட்டமைப்புச் சூழல் அமைப்பை மாற்றுவதற்கான புவியியல் மற்றும் பிற அதிநவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதிலும்  புவிசார் மற்றும் பிற அதிநவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதிலும்  இந்திய அரசின் தலையீடுகள் மற்றும் மிகப்பெரிய உந்துதல் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

 

பிரதமரின் விரைவு சக்தியின்  கீழ் முக்கியமான திட்ட இடங்கள் / தொழில்துறை குழுமங்கள் / சுற்றுலா தலங்கள் / சமூகத் துறை சொத்துக்களைச் சுற்றியுள்ள செல்வாக்குப் பகுதிகளை நிறைவு செய்ய இடஞ்சார்ந்த / பகுதி அடிப்படையிலான முழுமையான வளர்ச்சி அணுகுமுறை பின்பற்றப்படுகிறது என்று அவர் கூறினார்.

 

உள்கட்டமைப்பு திட்டமிடலில் விரைவு சக்தியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்காக நிறுவப்பட்ட  முக்கிய  அமைப்பான நெட்வொர்க் திட்டமிடல் குழுவின் 54 கூட்டங்களில் 71.26 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 100 திட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் முதலீடுகளை விரைவாகக் கண்காணித்து உகந்ததாக்குவதற்கும் இது ஒரு பயனுள்ள நடைமுறையாக உள்ளது என்று திருமதி சுமிதா தவ்ரா தெரிவித்தார்.

**********

ANU/AD/SMB/KRS(Release ID: 1955502) Visitor Counter : 90


Read this release in: English , Urdu , Marathi , Hindi