ஜல்சக்தி அமைச்சகம்
மீரட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்து
Posted On:
06 SEP 2023 7:01PM by PIB Chennai
தூய்மையான கங்கைக்கான தேசிய பணி (NMCG), உத்தரபிரதேச ஜல் நிகாம் மற்றும் மீரட் எஸ்டிபி பிரைவேட். மீரட் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு இடையே மீரட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (STP) மற்றும் பிற உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் புதுதில்லியில் NMCG தலைமை இயக்குனர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. இந்தத் திட்டம், ஹைப்ரிட் வருடாந்திர அரசு மற்றும் தனியார் கூட்டணி முறையில், மொத்த செலவில் ரூ. 369.74 கோடி செலவில், 2025 டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 220 மில்லியன் லிட்டர் மொத்த கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை (STP) நிர்மாணிப்பதற்கான திட்டத்திற்கு NMCG ஒப்புதல் அளித்துள்ளது, இந்தத் திட்டம் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரும்போது கங்கை நதியில் மாசுபாட்டைக் குறைக்க உதவும்.
(வெளியீட்டு ஐடி: 1955258)
AD/BS/KRS
(Release ID: 1955304)
Visitor Counter : 130