பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடற்படைத் தளபதிகள் மாநாடு - 2023/02 தொடக்க அமர்வு – மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சருடன் கலந்துரையாடல்

Posted On: 04 SEP 2023 6:12PM by PIB Chennai

பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் திரு. அஜய் பட், 4 ஆம் தேதியன்று புது தில்லியில் தொடங்கிய ஆண்டுக்கு இருமுறை நடக்கும் கடற்படைத் தளபதிகள் மாநாட்டின் போது மூத்த கடற்படைத் தலைமையுடன் உரையாடினார். 2023 ஆம் ஆண்டு முதன்முதலாக தில்லிக்கு வெளியே கமாண்டர்கள் மாநாடு மார்ச் 2023 இல் INS விக்ராந்த் கப்பலில் நடத்தப்பட்டதுஇன்று தொடங்கிய இரண்டாவது மாநாட்டில் , முதல் மாநாட்டின் போது எடுக்கப்பட்ட முடிவுகளின் நிலை மதிப்பாய்வு செய்யப்பட்டது.

திரு. அஜய் பட் தனது உரையாடலின் போது, தேசிய பாதுகாப்பு மற்றும் வளத்துக்காககடல் பகுதி பாதுகாப்பை உறுதி செய்வதில் உயர் செயல்பாட்டு வேகத்தைப் மேற்கொள்ளும் கடற்படையை பாராட்டினார். சமீபத்தில் உள்நாட்டு அதிநவீன போர் கப்பல்களான விந்தியகிரி மற்றும் மகேந்திரகிரியை அறிமுகப்படுத்திய போது வலியுறுத்தப்பட்ட, 2047 ஆம் ஆண்டுக்குள் முழு ஆத்மநிர்பர் படையாக மாறுவதற்கான உள்நாட்டுமயமாக்கல் மற்றும் புதுமைகளை நோக்கி முதலீடு செய்த முயற்சிகளுக்காக கடற்படையை அவர் பாராட்டினார்,

பிரதமர் திரு.நரேந்திரமோடியால் அறிவிக்கப்பட்ட ஐந்து முக்கிய கடப்பாடுகளுக்கு ஏற்ப நிலையான முயற்சிகளை மேற்கொண்டதற்காக கடற்படையை அவர் பாராட்டினார்.

 

ஜெனரல் அனில் சௌஹான், பாதுகாப்புப் படைகளின் தலைவர் டாக்டர் சமீர் வி காமத், டிஆர்டிஓ செயலாளர்  மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் அப்போது உடனிருந்தனர்.

கடல்சார் உள்கட்டமைப்பு முன்னோக்கு திட்டம் 2023-37, ஐஆர்எஸ் விதிகள் மற்றும் ஒழுங்குமுறை கையேடு, குடும்ப பதிவு புத்தகம் மற்றும் மின்னணு சேவை ஆவண திட்டம் ஆகியவற்றையும் இந்த நிகழ்வின் போது மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் வெளியிட்டார்.

 

 (வெளியீட்டு ஐடி: 1954662)

 

ANU/SM/BS/KRS


(Release ID: 1954765) Visitor Counter : 111


Read this release in: English , Urdu , Marathi , Hindi