பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் செப்டம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இலங்கைக்கு பயணம் செய்து பாதுகாப்பு உறவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்
प्रविष्टि तिथि:
01 SEP 2023 2:31PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் 2023 செப்டம்பர் 02 மற்றும் 03 ஆகிய தேதிகளில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, திரு. ராஜ்நாத் சிங் இலங்கை அதிபரும், பாதுகாப்பு அமைச்சருமான திரு. ரணில் விக்கிரமசிங்க மற்றும் அந்நாட்டு பிரதமர் திரு தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார் . இலங்கையுடன் இந்தியாவின் பாதுகாப்பு உறவுகள் குறித்து இந்த சந்திப்பின் போது ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது. இலங்கையின் மத்தியப் பகுதியில் உள்ள நுவரெலியா மற்றும் அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள திருகோணமலை ஆகிய இடங்களுக்கும் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
திரு ராஜ்நாத் சிங்கின் இந்தப் பயணம், இலங்கையுடன் தற்போதுள்ள நட்புறவை மேம்படுத்துவதில் இந்தியாவின் தொடர்ச்சியான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிசெய்யும். இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்புறவை மேம்படுத்துவதில் இது ஒரு முக்கியமான மைல் கல்லாக அமையும்.
***
ANU/AD/PLM/AG/KPG
(रिलीज़ आईडी: 1954069)
आगंतुक पटल : 171
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Marathi