விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நெல் பயிரிடும் பரப்பு 384.05 லட்சம் ஹெக்டேராக உள்ளது

प्रविष्टि तिथि: 25 AUG 2023 3:22PM by PIB Chennai

கரீஃப் பருவப் பயிர்கள் விளைவுக்கும் நிலப்பரப்பு அதிகரித்திருப்பது பற்றிய தகவலை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை 2023, ஆகஸ்ட் 25 அன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி நெல் பயிரிடும் பரப்பு 384.05 லட்சம் ஹெக்டேராக உள்ளது. இது சென்ற ஆண்டு 367.83 லட்சம்  ஹெக்டேராக இருந்தது.

பயிர் வகைகள் பயிரிடும் பரப்பு,  சென்ற ஆண்டு 128.07 லட்சம் ஹெக்டேராக இருந்த நிலையில்  இந்த ஆண்டு 117.44 லட்சம் ஹெக்டேராக உள்ளது.

சிறுதானியங்கள் மற்றும் மோட்டா ரக தானியங்கள் பயிரிடும் பரப்பு இந்த ஆண்டு 178.33 லட்சம் ஹெக்டேராக உள்ளது. இது சென்ற ஆண்டு 176.31 லட்சம்  ஹெக்டேராக இருந்தது.

எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பு சென்ற ஆண்டு 190.38 லட்சம் ஹெக்டேராக இருந்த நிலையில்  இந்த ஆண்டு 188.58 லட்சம் ஹெக்டேராக உள்ளது.

கரும்பு பயிரிடும் பரப்பு இந்த ஆண்டு 56.06 லட்சம் ஹெக்டேராகவும், பருத்தி பயிரிடும் பரப்பு 122.56 லட்சம் ஹெக்டேராகவும், சணல் பயிரிடும் பரப்பு 6.56 லட்சம் ஹெக்டேராகவும் உள்ளது.

 

***

SM/SMB/RS/KPG


(रिलीज़ आईडी: 1952216) आगंतुक पटल : 172
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri