திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் ஆஸ்திரேலிய அரசுடன் இணைந்து "சுகாதார பணியாளர் பயிற்சி மற்றும் திறன் முறைகளை மேம்படுத்துதல்" என்ற வட்டமேஜை மாநாட்டை நடத்தியது
प्रविष्टि तिथि:
24 AUG 2023 3:28PM by PIB Chennai
மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், ஆஸ்திரேலிய அரசுடன் இணைந்து, ஆகஸ்ட் 21, 2023 அன்று புதுதில்லியில் "சுகாதார பணியாளர் பயிற்சி மற்றும் திறன் முறைகளை மேம்படுத்துதல்" என்ற வட்டமேஜை மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது. இந்த சிறப்பு நிகழ்வில் ஆஸ்திரேலிய அரசின் சுகாதாரம் மற்றும் முதியோர் பராமரிப்பு அமைச்சர் திரு மார்க் பட்லர் மற்றும் மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் செயலாளர் திரு அதுல் குமார் திவாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சக செயலாளர் திரு அதுல் குமார் திவாரி, இந்த வட்டமேஜை விவாதத்திற்கு ஆஸ்திரேலிய அமைச்சர் திரு பட்லர் மற்றும் அவரது குழுவினரை வரவேற்றார். மேம்பட்ட மற்றும் சிறந்த ஒத்துழைப்பிற்காக, ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தொழிலாளர்களின் பயிற்சி மற்றும் கற்றலுக்கான உதவித்தொகை திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஆஸ்திரேலிய அமைச்சர் திரு மார்க் பட்லர் இந்தியாவின் மிகவும் பயனுள்ள ஜி 20 தலைமைத்துவ பதவிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, உலகளாவிய முன்னேற்றத்தை முன்னெடுப்பதில் இந்தியாவின் முக்கிய பங்கை சுட்டிக் காட்டினார். தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு 25 பேரில் ஒருவர் இந்தியர் என்றும், இதனால் இந்திய வம்சாவளியினர் ஆஸ்திரேலிய பொருளாதாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். இரு நாட்டுப் பிரதமர்களும் சமீபத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் பயணம் செய்ததன் மூலமும், பிற அமைச்சர்களின் பயணங்களாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
----------
AD/ANU/IR/RS/GK/DL
(रिलीज़ आईडी: 1951824)
आगंतुक पटल : 167