பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படையுடன் இந்திய கடலோரக் காவல்படை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

Posted On: 22 AUG 2023 7:06PM by PIB Chennai

இந்தியாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்திய கடலோரக் காவல்படை, பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படையுடன் (பி.சி.ஜி) மேம்பட்ட கடல்சார் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய கடலோரக் காவல்படைத் தலைமை இயக்குநர்  டிஜி ராகேஷ் பால் மற்றும் பி.சி.ஜி கமாண்டன்ட் சி.ஜி அட்மிரல் ஆர்டெமியோ எம் அபு ஆகியோர் இன்று புதுதில்லியில் உள்ள கடலோரக் காவல்படைத் தலைமையகத்தில் கையெழுத்திட்டனர். இரு தரப்பினரும் கடல்சார் பிரச்சினைகள் குறித்து தங்கள் முதல் இருதரப்பு சந்திப்பை நடத்தினர்.

கடல்சார் சட்ட அமலாக்கம் (எம்.எல்.), கடல்சார் தேடல் மற்றும் மீட்பு (எம்-எஸ்..ஆர்) மற்றும் கடல் மாசு மீட்பு  (எம்.பி.ஆர்) ஆகிய துறைகளில் இரு கடலோரக் காவல்படைகளுக்கும் இடையிலான தொழில்முறை இணைப்பை மேம்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முயற்சிக்கிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதன் மூலம், பிராந்தியத்தில் பாதுகாப்பானசுத்தமான கடல்களை உறுதி செய்வதற்காக இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்தும். இரு கடல்சார் அமைப்புகளுக்கும் இடையிலான முதல் இருதரப்பு சந்திப்பு, சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலமும், கூட்டுப் பயிற்சிகளை நடத்துவதன் மூலமும், பயிற்சி ஒத்துழைப்புகளை அதிகரிப்பதன் மூலமும் தொழில்முறை பிணைப்புகளை வலுப்படுத்துவதில் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது.

 

பி.சி.ஜி.யின் ஐந்து பேர் கொண்ட தூதுக்குழு, ஆகஸ்ட் 20 முதல் 24 வரை இந்தியாவில் சுற்றுப்பயணத்தில் உள்ளதுமுன்னதாக, தூதுக்குழு நேற்று கோவாவுக்கு விஜயம் செய்தது, அங்கு அவர்கள் 'தற்சார்பு இந்தியா' திட்டத்தின் கீழ் இந்திய கடலோரக் காவல்படைக் கப்பல்கள் மற்றும் விமானங்களின் செயல்பாட்டு திறன்களை பார்வையிட்டனர்.

*********

 

ANU/AP/PKV/KRS(Release ID: 1951233) Visitor Counter : 102


Read this release in: English , Urdu , Hindi