குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் (எய்ம்ஸ்) 48 வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் நிகழ்த்திய உரை

Posted On: 21 AUG 2023 6:28PM by PIB Chennai

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்!

மத்திய சுகாதாரம், குடும்ப நலன், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் மன்சுக் மாண்டவியா அவர்களேசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகெல் அவர்களே, எய்ம்ஸ் இயக்குநர் பேராசிரியர் எம்.ஸ்ரீனிவாஸ் அவர்களே, அர்ப்பணிப்பு மிக்க எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே,

 

மூன்று ஆண்டுகளுக்குப் பின் இங்குப் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இந்த இடைவெளி கொவிட் தொற்றுநோயை நமக்கு நினைவூட்டுகிறது. உலகமும், குறிப்பாக மனித குலத்தின் ஆறில் ஒரு பகுதியினரின் தாயகமான இந்தியாவும் அதை எவ்வாறு வெற்றிகரமாக எதிர்கொண்டது, கட்டுப்படுத்தியது என்பதை இந்த இடைப்பட்ட காலம்  விவரிக்கிறது. இது முதன்மையாக சுகாதார வீரர்களின் கடின முயற்சியால் ஏற்பட்டது, நீங்கள் அனைவரும் அந்த வகையைச் சேர்ந்தவர்கள்.மாண்புமிகு பிரதமரின் தொலைநோக்குப் பார்வை, அவரது புதுமையான உத்திகள்தடையற்ற செயலாக்கம் ஆகியவை முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்களின் பங்களிப்பை உறுதி செய்தன.

 

வாழ்நாள் சாதனையாளர் விருதுகளைப் பெற்றுள்ள இந்நிறுவனத்துடன் தொடர்புடைய ஆறு ஆசிரிய உறுப்பினர்களுக்கு எனது வாழ்த்துகள், அவர்களின் வருகை ஒரு நேரடித் தொடர்பை உருவாக்கும், உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் போற்றும் ஆற்றலையும் வலிமையையும் உங்களுக்கு வழங்கும்.

 

இன்று பட்டம் பெறும் அனைத்து இளைஞர்களும் வாழ்நாள் சாதனையாளர்களின் சுயவிவரத்தைப் படிக்கவும், அவர்களைப் பின்பற்றிச் செல்லவும், அவர்கள் செய்த அர்ப்பணிப்பு, அவர்கள் நமக்காக கொண்டு வந்த முடிவுகள், அவர்கள் எப்படி, ஏன் இந்த நிலைக்கு வர முடிந்தது என்பதையும் அறியுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். தன் சொந்த நிறுவனத்தாலும், தன் சகாக்களாலும் கௌரவிக்கப்படுவதை விட, வாழ்க்கையில் பெரிய சாதனை எதுவும் இருக்க முடியாது.

 

இது ஒவ்வொரு பெற்றோருக்கும் பெருமையான தருணமாகும், ஏனெனில் எய்ம்ஸ் என்ற குறியீட்டுச்சொல் மிக உயர்ந்த மதிப்பைக் கொண்டுள்ளது.இங்கு எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்., எம்.டி., டி.எம்., எம்.சி.எச்., பி.எச்.டி., பெறுபவர்களுக்கு வாழ்த்துகள். நீங்கள் நாடு முழுவதும் பரவும்போது, தரமான சுகாதாரம் மற்றும்  மக்களுக்கு நலவாழ்வின் மையமாக நீங்கள் மாறுவீர்கள். ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியும் அதன் மக்களின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. மக்கள் ஆரோக்கியமாக இல்லை என்றால், சாதனைகள் அதிகரிப்பது ஒருபுறம் இருக்கட்டும், உங்களால் சாதனைகள் செய்ய முடியாது.  'ஆரோக்கியமே   செல்வம்',

 

எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றும் அனைவருக்கும், பேராசிரியர்கள், துணை மருத்துவ பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தில்லி, கரக்பூர் ..டி மற்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பல முன்னணி நிறுவனங்களுடன் கூட்டாண்மையை உருவாக்கி எய்ம்ஸ் ஒரு சிறந்த சூழலை உருவாக்கியுள்ளது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. சிந்தனை, கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, மேம்பாடு ஆகிய திறமைகளை ஒருங்கிணைக்க வேண்டிய காலகட்டம் இது, இதன் மூலம் அனைவரும் பயனடைவார்கள், பெரிய தீர்வுகள் கிடைக்கும்.

 

நடுத்தர வர்க்கம் மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தின் பொருளாதாரம் வளர்கிறது, ஏனெனில் ஆயுஷ்மான் பாரத் அவர்களின் ஆரோக்கியத்திற்கு முழு உத்தரவாதம் அளிக்கிறது. நான் வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் இந்தியா உலகின் மருந்தகம் என்று மக்கள் கூறுவதைக் காண்கிறேன். அந்த திறமை, அந்த மனித வளம் நம்மிடம் உள்ளது, ஆனால் சாமானிய மக்களுக்கு மருத்துவம் கிடைக்க நாம் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும். இது  சேவை அம்சத்தை உள்ளடக்க வேண்டும்.

 

கடந்த சில ஆண்டுகளில் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையில் உண்மையான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது திருப்தியளிக்கும் விஷயம். எம்.பி.பி.எஸ்., எம்.டி., படிப்பில் மாணவர் சேர்க்கையை அதிகரித்துள்ளோம். நாம் அதை இன்னும் பெரிய உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும், அது நடந்தவுடன்நமது சுகாதார வீரர்களின் தாக்கத்தை உலகம் முழுவதும் உணரும் என்பதில்  எந்த சந்தேகமும் இல்லை.

 

ஒரு நோயாளியின் நலநுக்காகத்  தனது சொந்த ஆரோக்கியத்தைத் தியாகம் செய்யும்  மருத்துவர்கள் இந்த பூமியில், குறிப்பாக நம் நாட்டில் எப்போதும் இருக்கிறார்கள். நோயாளியைக் காப்பாற்ற அவர் தனது இதயத்தையும் ஆன்மாவையும் கொடுப்பார். நீங்கள் ஈடுபடப் போகும் அத்தகைய சேவைக்குப்  பெரிய வணக்கம்.

 

நிறைவாக, கொவிட் தொற்றுநோயை வெற்றிகரமாகக் கடக்க  உதவிய நமது மருத்துவர்கள் மற்றும் சுகாதார வீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதில் இந்த நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக்  கணக்கானவர்களுடன் நானும் இணைகிறேன். இன்று பட்டமளிப்பு விழாவிற்கு வந்துள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், ஆசிரியர்களின் கடின உழைப்புக்கும் எனது மனமார்ந்த நன்றியையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.

 

உங்கள் தேசத்தை எப்போதும் முதன்மையாக வைத்திருங்கள். இது விருப்பமில்லை, இது கட்டாயமில்லை, இதுதான் ஒரே வழி. உங்கள் தேசத்தை எப்போதும் முதலிடத்தில் வைத்திருக்க வேண்டும். நாம் பெருமைமிக்க இந்தியர்கள் என்று நம்ப வேண்டும், நமது வரலாற்று சாதனைகளில் பெருமிதம் கொள்ள வேண்டும். நண்பர்களே, மனிதத் துயரங்களைக் குறைக்கவும், அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறவும் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று உறுதியேற்போம்.

******

ANU/SM/SMB/KRS


(Release ID: 1950891) Visitor Counter : 146


Read this release in: English , Urdu , Hindi