சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

வருமானவரிப்பிடித்தம் குறித்த கருத்தரங்கம்

Posted On: 17 AUG 2023 10:15PM by PIB Chennai

வருமானவரி இணை ஆணையரகம், TDS சரகம் -3, சென்னை மற்றும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் தென்னக அமைப்பும் (FIEO (SR)) இணைந்து, திருமதி C திரிபுர சுந்தரி, IRS, ஆணையர் (TDS), சென்னை மற்றும் திரு M அர்ஜுன் மாணிக் , IRS இணை ஆணையர்(TDS), சென்னை அவர்களின் அறிவுரையின் அடிப்படையில் வருமானவரிப்பிடித்தம் செய்வது குறித்த கருத்தரங்கை, SPENCER PLAZA, சென்னையில் அமைந்துள்ள FIEO கருத்தரங்க கூடத்தில், 17-08-2023 (வியாழன்) நடத்தினர்.

இந்த TDS கருத்தரங்கத்தினை FIEO-ன் இணை இயக்குனர் ஜெனரல் திரு K உன்னிகிருஷ்ணன் தலைமை ஏற்று, தமது வரவேற்புரையை வழங்கினார்.

திரு E இளங்கோ, IRS, துணை ஆணையர்(TDS), சென்னை, வருமானவரி சட்டத்தில் உள்ள TDS /TCS விதிகளில், அண்மையில் செய்யப்பட்ட திருத்தங்கள் குறித்து விரிவாக விளக்கினார்திரு L ராஜாராமன் ITO மற்றும் திரு T V ஸ்ரீதர் ITO, வருமானவரி சட்டத்தில் இடம்பெற்றுள்ள வரிப்பிடித்தம் / வரிவசூல் ( TDS /TCS) குறித்த விதிகளின் சாராம்சத்தையும், அவ்விதிகளை பின்பற்றவில்லை என்றால் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தெளிவாக விளக்கினார்திருமதி சுபாஷினி கணபதி, CA, வரிப்பிடித்தம் / வரிவசூல் செய்பவர்கள் TRACES தளத்தில், மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை எளிய முறையில் விளக்கினார்.

இந்த கருத்தரங்கில், பொறியியல், ஆடைகள் மற்றும் தோல் , மற்றும் ஏனைய துறைகளை சார்ந்த ஏற்றுமதியாளர்கள் / இறக்குமதியாளர்களான 30-க்கும் மேற்பட்ட நபர்கள் நேராகவும் 100-க்கும் மேற்பட்டவர்கள் இணைய வழி முலமாகவும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


செல்வநாயகி , இணை இயக்குனர் , FIEO (SR ) நன்றி பாராட்டினார்.

***




(Release ID: 1950019) Visitor Counter : 145


Read this release in: English