மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

இந்தியா ஸ்டேக் பகிர்வது தொடர்பாக டிரினிடாட் மற்றும் டொபாகோவுடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

Posted On: 17 AUG 2023 3:42PM by PIB Chennai

அடையாளம், தரவு மற்றும் கட்டண சேவைகளை பெரிய அளவில் எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட டிஜிட்டல் பொது பொருட்களின் தொகுப்பான இந்தியா ஸ்டேக்கைப் பகிர்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும், டிரினிடாட் மற்றும் டொபாகோவும் கையெழுத்திட்டுள்ளன.

திறன் மேம்பாடு, பயிற்சித் திட்டங்கள், சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ளுதல், அரசு அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் பரிமாற்றம், பைலட் அல்லது செயல்முறை தீர்வுகளை உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் டிஜிட்டல் மாற்றம் போன்ற துறைகளில் ஒத்துழைக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் கடந்த வாரம் டிரினிடாட் மற்றும் டொபாகோவின் டிஜிட்டல் மாற்றத்துறை அமைச்சர் திரு ஹாசல் பச்சஸை சந்தித்த பின்னர் இந்த ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, தகவல் தொழில்நுட்பம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் இந்தியா ஸ்டேக் ஆகிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து அவர்கள் விவாதித்தனர்.

இந்தியா ஸ்டேக் சலுகைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், "வசுதைவ குடும்பகம் (உலகம் ஒரு குடும்பம்) கொள்கையில் நம்பிக்கை கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு குறிப்பாக டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளில் பின்தங்கியவர்களுக்கு இந்தியா ஸ்டேக் வழங்குவதை எப்போதும் ஊக்குவித்து வருகிறார். இந்தியா ஸ்டேக்கின் உதவியுடன், இந்த நாடுகள் டிஜிட்டல் மயமாக்கலில் விரைவாக மாறி தங்கள் பொருளாதாரங்களையும், நிர்வாகத்தையும் மாற்ற முடியும்.

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தேசிய மின் ஆளுமைப் பிரிவு மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகள் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஜூன் 2023 முதல், இந்தியா ஏற்கனவே ஆர்மீனியா, சியாரா லியோன், சுரினாம் மற்றும் ஆன்டிகுவா & பார்படா ஆகிய நாடுகளுடன் இந்தியா ஸ்டேக்கைப் பகிர்ந்து கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது, அதே நேரத்தில் மொரிஷியஸ், சவுதி அரேபியா போன்ற பல நாடுகள் ஆர்வம் காட்டி இந்தியா ஸ்டேக்கில் ஒத்துழைப்பை இறுதி செய்வதற்கான மேம்பட்ட கட்டத்தில் உள்ளன. இதேபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த மாதம் பப்புவா நியூ கினியாவுடனும் கையெழுத்தானது, இது உலகளாவிய அளவில் இந்த முன்முயற்சியின் வளர்ந்து வரும் ஆர்வத்தையும் ஏற்பையும் காட்டுகிறது. இந்தியா ஸ்டேக்கின் ஒரு பகுதியான யுபிஐ பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

*****

SM/ANU/IR/RS/KPG

 


(Release ID: 1949944) Visitor Counter : 248