மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அடைந்துள்ள மாபெரும் முன்னேற்றங்கள் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய 77-வது சுதந்திர தின உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்

Posted On: 15 AUG 2023 5:50PM by PIB Chennai

77-வது சுதந்திர தின நன்னாளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த அற்புதமான பயணத்தில் பெருமைமிக்க தேசம் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க சாதனைகளுடன், கடந்த தசாப்தத்தில் தொழில்நுட்பத்துறை எவ்வாறு முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது என்பது பற்றியும் அவர் பேசினார். டிஜிட்டல் முறையில் அதிகாரமளிக்கப்பட்ட இந்தியாவின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

  1. அரசின் கொள்கைகள் நாட்டின் இளைஞர்களுக்கு ஆதரவை வழங்குவதாகவும், அவற்றின் வலிமை உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சூழல் அமைப்பாக மாற இந்தியாவிற்கு உதவியதாகவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது உரையில், எடுத்துரைத்தார்.
  2. இந்தியாவில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை வலியுறுத்திய,  திரு நரேந்திர மோடி, இந்தியாவின் டிஜிட்டல் துறையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றத்தையும்,  2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்களில் டிஜிட்டல் இந்தியாவின் வெற்றியையும் அவர் எடுத்துரைத்தார்.
  3. ஜி20 உச்சிமாநாட்டிற்காக அண்மையில் பாலி சென்றிருந்தபோது, டிஜிட்டல் இந்தியா வெற்றிக் கதையின் நுணுக்கங்கள் குறித்து உலகத் தலைவர்கள் தம்மிடம் கேள்வி எழுப்பியதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டார். “கடந்த ஆண்டு பாலியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் வளர்ந்த நாடுகள் உட்பட அனைவரும் டிஜிட்டல் பொதுக்கட்டமைப்பின் வெற்றியை அறிய விரும்பினர். இந்தியா என்ன செய்தாலும் அது மும்பை, தில்லி மற்றும் கொல்கத்தாவில் மட்டுமின்றி, 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்களிலும் இளைஞர்கள் பல்வேறு துறைகளில் நிறைய தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று நான் கூறினேன்... இந்தியாவின் மிகச்சிறிய நகரங்களிலும்... அதேபோல் கிராமங்களிலும் கூட, நம்பிக்கையின் தைரியம் உள்ளது..." என்று செய்தி முகமை ஒன்று கூறியதை அவர் மேற்கோள்காட்டினார்.
  4. நவீனமயமாக்கலை நோக்கி இந்தியா பன்முகத் திறன்களுடன் முன்னேறி வருவதாக திரு. நரேந்திர மோடி எடுத்துரைத்தார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதல் ஹைட்ரஜன் எரிசக்தி வரை இந்தியா முன்னேறி வருகிறது. விண்வெளியில் நமது திறன் அதிகரித்து வரும் நிலையில், ஆழ்கடல் பயணங்களில் நாம் விரைவாக வெற்றி கண்டு வருகிறோம் என்று கூறிய அவர், கிராமங்களில் அதிகரித்த இணையப் பரவல் முதல் குவாண்டம் கணினிகள் வரையிலான இந்தியாவின் முன்னேற்றத்தையும் எடுத்துரைத்தார்.
  5. எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொழில்நுட்பம் வகிக்கும் முக்கியப் பங்கினை அங்கீகரித்த பிரதமர், விண்வெளி முதல் ஆழ்கடல் பயணங்கள் வரையிலும், வந்தே பாரத் ரயில்கள், மின்சாரப் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், இணையத்தைப் பெறும் கிராமங்கள், செமிகண்டக்டர் உற்பத்தி என  நாம் ஒவ்வொரு துறையிலும் செயலாற்றி வருகிறோம் என்றார். இந்தியா தனது இலக்கை நோக்கி நகர்ந்து வருகிறது. எந்தத் திட்டங்களுக்கு இந்த அரசு அடிக்கல் நாட்டுகிறதோ, அந்தத் திட்டங்களை இதே அரசு தொடங்கிவைக்கிறது. நாங்கள் பெரியதையும், தொலைநோக்கையும் இலக்காகக் கொண்டுள்ளோம்.

***

(AD/SMB/AG/GK)



(Release ID: 1949463) Visitor Counter : 105


Read this release in: Urdu , English , Hindi