குடியரசுத் தலைவர் செயலகம்
பார்சி புத்தாண்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
15 AUG 2023 6:17PM by PIB Chennai
பார்சி புத்தாண்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
"பார்சி புத்தாண்டு நவ்ரோஸ் நன்னாளில், அனைத்து சக குடிமக்களுக்கும், குறிப்பாக நமது பார்சி சகோதர சகோதரிகளுக்கு எனது அன்பான வாழ்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பார்சி புத்தாண்டு நவரோஸ் நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் திருவிழாவாகும். ஏழைகளுக்கு உதவ இந்த விழா நமக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. பார்சி சமூகத்தினர் தங்கள் தொலைநோக்குப் பார்வை, கடின உழைப்பு மற்றும் தொழில்முனைவோர் மனப்பான்மை மூலம் நமது தேசத்தின் வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
இந்த நவரோஸ் பண்டிகை அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்".
ஜனாதிபதியின் செய்தியைக் காண இங்கே சொடுக்கவும் -
***
(रिलीज़ आईडी: 1949399)
आगंतुक पटल : 132