குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

சுலப் இன்டர்நேஷனல் நிறுவனர் டாக்டர் பிந்தேஷ்வர் பதக் மறைவுக்கு குடியரசுத் துணைத்தலைவர் இரங்கல்

Posted On: 15 AUG 2023 7:59PM by PIB Chennai

பிரபல சமூக ஆர்வலரும், சுலப் இன்டர்நேஷனலின் நிறுவனருமான டாக்டர் பிந்தேஷ்வர் பதக்கின் மறைவுக்கு குடியரசுத் துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

துணைத்தலைவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

"புகழ்பெற்ற சமூக ஆர்வலரும், சுலப் இன்டர்நேஷனலின் தொலைநோக்குப் பார்வை கொண்ட நிறுவனருமான டாக்டர் பிந்தேஷ்வர் பதக் ஜியின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. கையால் மலம் அள்ளுவதை ஒழிப்பதிலும், சுகாதாரத்தை மேம்படுத்துவதிலும் அவரது இடைவிடாத அர்ப்பணிப்பு எண்ணற்ற மனிதர்களை உயர்த்தியுள்ளது. இந்த துயரமான நேரத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருடன் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன.

 ***** 



(Release ID: 1949395) Visitor Counter : 120


Read this release in: English , Urdu , Hindi