குடியரசுத் தலைவர் செயலகம்

நெட்வொர்க் 18 ஏற்பாடு செய்துள்ள 'ரைசிங் இந்தியா - ஷீ சக்தி' நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

Posted On: 11 AUG 2023 7:36PM by PIB Chennai

நடைபெற்ற 'எழுச்சியுறும்  இந்தியா மகளிர் சக்தி' நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். பெண் சாதனையாளர்களை அங்கீகரித்து கவுரவிக்கும் வகையில் நெட்வொர்க் 18 இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.

 

இந்த நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், இன்று எமது நாடு 'அமிர்த  காலத்தில்’ நுழைந்துள்ள நிலையில், பெண் சாதனையாளர்களை அங்கீகரிப்பதற்கும், கௌரவிப்பதற்கும், கொண்டாடுவதற்கும் இத்தகைய நிகழ்வை ஏற்பாடு செய்வது மிகவும் பொருத்தமானது என்றார்.

 

எதிர்காலத்தில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். ஆனால் நமது மக்கள் தொகையில் பாதி பேரின் பங்களிப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை. சில மாநிலங்களில் தொழிலாளர் சக்தியில் பெண்களின் போதுமான பிரதிநிதித்துவம் உள்ளது, ஆனால் பல மாநிலங்களில் அவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் பங்களிப்பு அவசியம் என்று அவர் கூறினார்.

 

எமது மகள்கள் மற்றும் சகோதரிகள் வாழ்க்கையில் முன்னேறவும், நாட்டிற்கும் சமூகத்திற்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற அபரிமிதமான விருப்பத்தைக் கொண்டுள்ளனர் என்று குடியரசுத் தலைவர்  கூறினார். நமது மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு மரியாதை மற்றும் சரியான வாய்ப்புகளை வழங்குவது நமது பாரம்பரியம் மற்றும் நமது பொறுப்பு. எளிய பின்னணியில் இருந்து வரும் பெண்கள் மன உறுதியுடனும் கடின உழைப்புடனும் கண்ணாடி கூரைகளை உடைத்து அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

 

பெண்கள் மீதான மரியாதையே நமது கலாச்சாரத்தின் அடிப்படை என்று குடியரசுத் தலைவர் கூறினார். பெண்கள் அவமதிக்கப்படும் போதெல்லாம், இதுபோன்ற தவறுகளை கண்டிக்க ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றுபட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு நமது பாரம்பரியத்தில் நிறைய சான்றுகள் உள்ளன. சில துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் இன்றும் நடக்கின்றன, அவை பெண்கள் மீதான நமது நித்திய மரியாதைக்கு முற்றிலும் எதிரானவை என்று அவர் மேலும் கூறினார். பெண்களை மதிக்கும் எண்னம், பெண்களுக்கான நீதி மனப்பான்மையும் நிறைந்த நமது அமைப்பு, நமது மகளிர்-சக்தி தொடர்ந்து முன்னேறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

பெண்களை மேலும் அதிகாரம் மிக்கவர்களாக மாற்றுவதற்கு அரசாங்கம் தொடர்ந்து முயற்சித்து வருவதாக அவர்  குறிப்பிட்டார். ஆனால், ஒரு சமூகமாக, நாம் அனைவரும் நமது மகள்கள் மற்றும் சகோதரிகளின் அதிகாரமளித்தலுக்கு பங்களிக்க வேண்டும். சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் துறைகளில் அனைத்து பெண்களும் முழுமையாக பங்களீக்க பங்களிக்கக்கூடிய சூழலை நாம் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

 

ஊடகங்கள் நமது சமூக அமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகவும் , நமது ஜனநாயகத்தின் முக்கிய தூணாக இருப்பதாகவும், ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும் குடியரசுத் தலைவர் கூறினார். பெண் சாதனையாளர்களுக்கு இதுபோன்ற ஒரு நல்ல தளத்தை வழங்கியதற்காகவும், அவர்களை கௌரவித்ததற்காகவும் நெட்வொர்க் 18 அவர் பாராட்டினார். பெண்கள் மேம்பாட்டிற்காக இதுபோன்ற முன்னெடுப்புகளை ஏற்பாடு செய்ய இந்த நிகழ்வு மற்ற நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

**************  

ANU/AD/PKV/KRS



(Release ID: 1947989) Visitor Counter : 107


Read this release in: English , Urdu , Hindi