கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் துறைமுகங்களின் பணிகள்
Posted On:
11 AUG 2023 4:00PM by PIB Chennai
சமூகப் பொறுப்புணர்வு வழிகாட்டுதல்களின்படி, சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களை செயல்படுத்த பெரிய துறைமுகங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
பெரிய துறைமுகங்கள் ஒவ்வொரு ஆண்டும் அவற்றின் நிகர லாபத்தின் சதவீதத்தில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தை சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளுக்காக பின்வரும் விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கவேண்டும்:
துறைமுக நிகர லாபம்
|
ஒரு நிதியாண்டில் சமூகப் பொறுப்புணர்வு செலவின வரம்பு
(%) லாபம்
|
ரூ.100 கோடிக்கும் குறைவான லாபம்
|
3 சதவீதம் முதல் - 5 சதவீதம் வரை
|
ரூ.100 கோடி முதல் ரூ.500 கோடி வரை லாபம்
|
2 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை
|
ரூ.500 கோடி மற்றும் அதற்கு மேல்
|
0.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை
|
.
2022-23ஆம் நிதியாண்டில் முக்கிய துறைமுகங்களின் சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளுக்கான செலவினங்கள் பின்வருமாறு:-
துறைமுகத்தின் பெயர்
|
2022-23 நிதியாண்டில் சமூகப் பொறுப்பு செயல்பாட்டுச் செலவு ( ரூபாய் கோடியில் )
|
புதிய மங்களூர் துறைமுக ஆணையம்
|
2.07
|
கொச்சி துறைமுக ஆணையம்
|
1.52
|
சியாமாபிரசாத் முகர்ஜி துறைமுக ஆணையம்
|
0.41
|
பாரதீப் துறைமுக அதிகாரசபை
|
8.58
|
மர்மகோவா துறைமுக ஆணையம்
|
0.0027
|
காமராஜர் துறைமுக ஆணையம்
|
9.80
|
தீனதயாள் துறைமுக அதிகாரசபை
|
10.14
|
விசாகப்பட்டினம் துறைமுக ஆணையம்
|
0.27
|
வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம்
|
1.84
|
ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம்
|
1.22
|
இத்தகவலை மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
AP/ANU/PLM/RS/KPG
(Release ID: 1947923)