பாதுகாப்பு அமைச்சகம்
பாகிஸ்தான் பகுதியிலிருந்து எல்லைப் பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதல் குறித்த தகவல்கள்
प्रविष्टि तिथि:
11 AUG 2023 2:45PM by PIB Chennai
பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகள் மற்றும் நடப்பு ஆண்டில் (ஜூன் 2023 வரை) இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்த விவரங்கள் பின்வருமாறு:
|
ஆண்டு
|
ராணுவ வீரர்கள் உயிரிழப்பு எண்ணிக்கை
|
பொதுமக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை
|
|
2020
|
24
|
22
|
|
2021
|
04
|
-
|
|
2022
|
-
|
-
|
|
2023 (ஜூன், 2023 வரை)
|
-
|
-
|
பாகிஸ்தானின் போர் நிறுத்த அத்துமீறல்களுக்கு உரிய பதிலடி கொடுக்கும் நடவடிக்கை, பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், போர்நிறுத்த மீறல்கள் அனைத்தும் பொருத்தமான நிலையில் பாகிஸ்தான் அதிகாரிகள்-மட்டத்தில் எடுத்துச் செல்லப்படுகின்றன. பிப்ரவரி, 2021-ல் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநரக புரிந்துணர்வு செயல்பாடு நடைமுறைக்கு வந்த பிறகு, மூன்று போர்நிறுத்த அத்துமீறல்கள் மட்டுமே நடைபெற்றுள்ளன. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் குண்டுவீச்சு சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. இருப்பினும், இதுபோன்ற அனைத்து நிகழ்வுகளுக்கும் நமது படைகள் தயாராக உள்ளன.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையின் புனிதத்தை பாகிஸ்தான் நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தியா மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் திரு அஜய் பட் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
***
AP/ANU/PLM/RS/KPG
(रिलीज़ आईडी: 1947892)
आगंतुक पटल : 174