சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கிராமப்புற சுகாதாரத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
Posted On:
11 AUG 2023 2:18PM by PIB Chennai
இந்தியாவின் ஆரம்ப சுகாதார அமைப்பின் மூன்று தூண்களாக துணை சுகாதார மையம் (கிராமப்புறம்), ஆரம்ப சுகாதார மையம் (நகர்ப்புற மற்றும் கிராமப்புறம்) மற்றும் சமூக சுகாதார மையம் (நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம்) ஆகியவற்றைக் கொண்ட மூன்றடுக்கு அமைப்பை நாட்டின் சுகாதார அமைப்பு உள்ளடக்கியது.
நிறுவப்பட்ட விதிமுறைகளின்படி, கிராமப்புறங்களில் 5,000 (சமவெளியில்) மற்றும் 3000 (மலை மற்றும் பழங்குடி பகுதிகளில்) மக்கள் தொகைக்கு ஒரு துணை சுகாதார நிலையம், 30,000 (சமவெளி) மற்றும் 20,000 (மலை மற்றும் பழங்குடி பகுதிகளில்) மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 1,20,000 (சமவெளி மற்றும் பழங்குடி பகுதிகளில்) மற்றும் 80,000 (மலைப்பகுதி) மக்கள்தொகை கொண்ட சமூக சுகாதார மையம் ஆகியவை உள்ளன. மேலும், நகர்ப்புறங்களில் 15,000 முதல் 20,000 வரையிலான மக்களுக்கு ஒரு நகர்ப்புற சுகாதார நல மையம், 30,000 முதல் 50,000 வரையிலான நகர்ப்புற மக்களுக்கு ஒரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், மெட்ரோ அல்லாத நகரங்களில் (5 லட்சம் மக்கள்தொகைக்கு மேல்) ஒவ்வொரு 2.5 லட்சம் மக்களுக்கும், மெட்ரோ நகரங்களில் ஒவ்வொரு 5 லட்சம் மக்களுக்கும் ஒரு யு-சி.எச்.சி பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், மாவட்ட மருத்துவமனை (DH), துணை மாவட்ட மருத்துவமனை (SDH) மற்றும் முதல் பரிந்துரைப் பிரிவு ஆகியவை கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு இரண்டாம் நிலை பராமரிப்பு சேவைகளை வழங்குகின்றன.
கிராமப்புற சுகாதார புள்ளிவிவரங்கள் (ஆர்.எச்.எஸ்) என்பது மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் தெரிவிக்கப்பட்ட சுகாதார பராமரிப்பு நிர்வாக தரவுகளின் அடிப்படையில் ஒரு வருடாந்திர வெளியீடாகும். கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் செயல்படும் துணை மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை கோட்ட மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் மாநில / யூனியன் பிரதேச வாரியான எண்ணிக்கை மற்றும் கிராமப்புற சுகாதார மையங்களின் கீழ் உள்ள சராசரி மக்கள்தொகையின் விவரங்கள் 2021-22 இன் பின்வரும் இணைப்பில் காணலாம்:
https://hmis.mohfw.gov.in/downloadfile?filepath=publications/Rural-Health-Statistics/RHS%202021-22.pdf
தேசிய சுகாதார இயக்கம் (என்.எச்.எம்) மக்களின் தேவைகளுக்கு பொறுப்பான மற்றும் பதிலளிக்கக்கூடிய சமமான, குறைந்த கட்டண மற்றும் தரமான சுகாதார சேவைகளுக்கான உலகளாவிய அணுகலை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் திட்ட செயலாக்கத் திட்டங்கள் (பிஐபி) வடிவில் பெறப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில், பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்த மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குகிறது. இந்திய அரசு இந்த முன்மொழிவுகளுக்கு விதிமுறைகள் மற்றும் கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் படி நடவடிக்கை பதிவு (ஆர்ஓபி) வடிவத்தில் ஒப்புதல் அளிக்கிறது.
நாட்டில் செயல்படும் கிராமப்புற சுகாதார மையங்களின் எண்ணிக்கையை, மாநில / யூனியன் பிரதேச வாரியாக ஆர்.எச்.எஸ் 2021-22 இன் பின்வரும் இணைப்பில் காணலாம்:
https://hmis.mohfw.gov.in/downloadfile?filepath=publications/Rural-Health-Statistics/RHS%202021-22.pdf
கடந்த ஐந்து ஆண்டுகளில் சுகாதார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான மாநில/ யூனியன் பிரதேச வாரியான மத்திய அரசின் வெளியீடுகள் மற்றும் செலவினங்கள்இணைப்பு-1ல் உள்ளன.
2020-21 நிதியாண்டு முதல் 2022-23 நிதியாண்டு வரை தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான மாநில / யூனியன் பிரதேச வாரியான ஒப்புதல் மற்றும் செலவினம்இணைப்பு-2ல் இணைக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
-----
ANU/AP/PKV/KPG
(Release ID: 1947875)
Visitor Counter : 347