பாதுகாப்பு அமைச்சகம்

ஆயுதப் படைகளுக்கான பொருட்களைக் கொள்முதல் செய்தல்

Posted On: 11 AUG 2023 2:54PM by PIB Chennai

பாதுகாப்பு உபகரணங்களின் மூலதன கொள்முதல் "தற்சார்பு" என்பதை மையமாகக் கொண்டு பாதுகாப்பு கொள்முதல் நடைமுறையின் படி மேற்கொள்ளப்படுகிறது.

பாதுகாப்புத் துறையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக அரசு பல்வேறு கொள்கை முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்(எம்.எஸ்.எம்.இ.)/ ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கேற்பதற்கு ஏதுவாபாதுகாப்பு கொள்முதல் விதிகளில் சில பின்வருமாறு:

இந்தப் பிரிவில் பங்கேற்க குறைந்தபட்சம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எம்.எஸ்.எம்.இ.க்கள் தகுதி பெற்றிருந்தால். எம்.எஸ்.எம்.இ.க்களுக்கு ரூ.100 கோடி வரை செலவுடனான ஒதுக்கீடு வழங்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப்கள் / எம்.எஸ்.எம்.இ.களுக்கான நிதி அளவை தளர்த்துதல்.

அங்கீகரிக்கப்பட்ட குறு மற்றும் சிறு நிறுவனங்களிடமிருந்து (எம்.எஸ்.இ) ஈ.எம்.டி தேவையை தள்ளுபடி செய்தல்.

மேக்-1 திட்டங்களுக்கு எம்.எஸ்.எம்.இ.களுக்கான நிதி தகுதி அளவுகோல்களில் தளர்வு.

கடந்த ஐந்து நிதியாண்டுகளில் (2018-19 முதல் 2022-23 வரை) பாதுகாப்புப் பொருட்கள் / தளவாடங்களை வாங்குவதற்காக 239 மூலதன கையகப்படுத்தல் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதில், மொத்த ஒப்பந்த மதிப்பில், 68 சதவீத பங்கு கொண்ட, 168 ஒப்பந்தங்கள், எம்.எஸ்.எம்.இ., உள்ளிட்ட இந்திய விற்பனையாளர்களுடன் கையெழுத்திடப்பட்டுள்ளன. உள்நாட்டு விற்பனையாளர்களுடன் கையெழுத்திடப்பட்ட மூலதன ஒப்பந்தங்களின் ஆண்டு வாரியான விவரங்கள் பின்வருமாறு:

வ.
எண்

ஆண்டு

ஒப்பந்தங்களின்
 எண்ணிக்கை

1

2018-19

30

2

2019-20

38

3

2020-21

34

4

2021-22

30

5

2022-23

36

 

மக்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு அஜய் பட் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இந்த தகவலைத் தெரிவித்தார்.

***

ANU/AD/SMB/AG/KPG

 

 



(Release ID: 1947829) Visitor Counter : 96


Read this release in: English , Urdu