சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
வீடுகள் தோறும் மூவண்ணக்கொடி- அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடிகள் விற்பனைக்கு
Posted On:
11 AUG 2023 12:27PM by PIB Chennai
வீடுகள் தோறும் மூவண்ணக்கொடி இயக்கத்தை செயல்படுத்த அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒவ்வொரு கொடியும் குறைந்த விலையாக ரூ.25-க்கு விற்கப்படுகின்றன. அனைத்து அஞ்சலகங்களிலும் தேசிய கொடிகள் விற்கப்படுகின்றன.
இணையதளம் வாயிலாகவும் ஆர்டர்களை பதிவு செய்யலாம். இதற்கான அஞ்சல் துறையின் இணையதள முகவரி www.epostoffice.gov.in
தேசிய கொடியை வாங்குவதற்கு ஆர்வம் உள்ளவர்கள் இந்த இணைய தள முகவரியில் ஆகஸ்ட் 12 அல்லது அதற்கு முன்னதாக ஆர்டர்களை பதிவு செய்யவேண்டும்.
கொடிகளை சில்லரையாகவும் அல்லது மொத்தமாகவும் வாங்க, பொதுமக்கள் அருகில் உள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
***
AP/SMB/AG
(Release ID: 1947658)
Visitor Counter : 198