சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
மின்சார வாகனங்கள்
Posted On:
10 AUG 2023 3:12PM by PIB Chennai
கடந்த 4 ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் அதிகரிப்பு விகிதம் பின்வருமாறு:
ஆண்டு
|
பதிவு செய்யப்பட்ட மின்சார வாகனங்களின் எண்ணிக்கை
|
ஆண்டுக்கு ஆண்டு பதிவு சதவீதம் அதிகரிப்பு
|
2018
|
130254
|
----
|
2019
|
166822
|
28.07%
|
2020
|
124654
|
-25.28%
|
2021
|
331466
|
165.91%
|
2022
|
1024808
|
209.17%
|
2023 (03-08-2023 வரை)
|
847439
|
----
|
நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க கனரக தொழில்துறை அமைச்சகம் பின்வரும் முயற்சிகளை எடுத்துள்ளது:-
- இந்தியாவில் (ஹைபிரிட் மற்றும்) மின்சார வாகனங்களின் உற்பத்தி திட்டம் 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது மற்றும் தற்போது, ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டம் 2019 ஏப்ரல் 01 முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ.10,000 கோடி மொத்த வரவுசெலவுத் திட்ட ஆதரவுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஃபேம் II 7,090 மின்சார பேருந்துகள், 5 லட்சம் மின்சார-மூன்று சக்கர வாகனங்கள், 55,000 மின்சார-4 சக்கர பயணிகள் கார்கள் மற்றும் 10 லட்சம் மின்சார-2 சக்கர வாகனங்களுக்கு மானியங்கள் மூலம் பொது மற்றும் பகிரப்பட்ட போக்குவரத்தை ஆதரிப்பதில் கவனம் செலுத்துகிறது.
- நாட்டில் பேட்டரியின் விலையைக் குறைப்பதற்காக நாட்டில் மேம்பட்ட வேதியியல் செல் உற்பத்தி செய்வதற்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் (பி.எல்.ஐ) திட்டத்திற்கு அரசு 12 மே 2021 அன்று ஒப்புதல் அளித்தது. பேட்டரி விலை குறைவதால் எலெக்ட்ரிக் வாகனங்களின் செலவு குறையும்.
- ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் (பி.எல்.ஐ) திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்கள் அடங்கும், இது 2021 செப்டம்பர் 15 அன்று ரூ.25,938 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டில் ஐந்து ஆண்டு காலத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பின்வரும் முயற்சிகளை எடுத்துள்ளது:-
- பேட்டரியில் இயங்கும் போக்குவரத்து வாகனங்களுக்கு 2018 அக்டோபர் 18 தேதியிட்ட அரசாணை 5333 (இ) மூலம் அனுமதி தேவைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு 2021 ஆகஸ்ட் 2 ஆம் தேதியிட்ட ஜி.எஸ்.ஆர் 525 (இ) மூலம் பதிவு சான்றிதழ் வழங்குதல் அல்லது புதுப்பித்தல் மற்றும் புதிய பதிவு குறியீட்டை வழங்குவதற்கான கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 18, 2023 தேதியிட்ட ஜி.எஸ்.ஆர் 302 (இ) மூலம் அனுமதி கட்டணம் செலுத்தாமல் பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு அகில இந்திய சுற்றுலா அனுமதி வழங்கப்படுகிறது.
03.08.2023 நிலவரப்படி தமிழ்நாட்டில் 1,73,152 மின்சார வாகனங்கள்
உள்ளன.
இத்தகவலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
*****
(Release ID:1947389)
ANU/AD/IR/KRS
(Release ID: 1947605)
Visitor Counter : 156