சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

இலவசப் பயிற்சி மற்றும் அது சார்ந்த திட்டத்தின் கீழ் பயனாளிகள்

Posted On: 10 AUG 2023 3:21PM by PIB Chennai

இலவச பயிற்சி மற்றும் அது சார்ந்த திட்டம், அங்கீகரிக்கப்பட்ட திட்ட அமலாக்க முகமைகள் மூலம் நாடு முழுவதும் சிறுபான்மையின நலத்துறை அமைச்சகம் செயல்படுத்தியது. புதிய கல்விக் கொள்கை 2020, பயிற்சித் திட்டங்களை ஆதரிக்கவில்லை என்பதாலும், பயிற்சி வகுப்புகளின் தேவையை அகற்றுவதற்காக தற்போதுள்ள வாரிய மற்றும் நுழைவுத் தேர்வு முறையை சீர்திருத்துவதை நோக்கமாகக் கொண்டதாலும் இந்த திட்டம் 2022-23 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. 2020-21 முதல் 2022-23 வரை இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி, பயன்படுத்தப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு:

 

ஆண்டு

ஒதுக்கப்பட்ட        நிதி

( கோடியில்)

பயன்படுத்தப்பட்ட நிதி

(கோடியில்)

ஒதுக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை

2020-21

25.00

18.44

5,300

2021-22

39.35

37.15

5,090

2022-23

29.97

25.00

இல்லை*

 

 

இத்திட்டம் நிறுத்தப்பட்டதால் 2022-23 ஆம் ஆண்டிற்கு எந்த ஒதுக்கீடும் செய்யப்படவில்லை.

 

இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்த சிறுபான்மை மாணவர்களின் மாநில வாரியான விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க முகமைகளுக்கு விடுவிக்கப்பட்ட நிதி ஆகியவை www.minorityaffairs.gov.in அமைச்சகத்தின் இணையதளத்தில் கிடைக்கின்றன. இத்திட்டத்தின் கீழ் மாநில வாரியாக நிதி ஒதுக்கப்படுவதில்லை.

 

இத்தகவலை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

****


(Release ID 1947405)

ANU/AD/IR/KRS



(Release ID: 1947602) Visitor Counter : 72


Read this release in: English , Urdu