குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஆதரிக்கும் திட்டங்கள்

Posted On: 10 AUG 2023 3:18PM by PIB Chennai

நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்திடமிருந்து பெறப்பட்ட சமீபத்திய தகவல்களின்படி, 2021-22 ஆம் ஆண்டில் அகில இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) எம்.எஸ்.எம்.இ மொத்த மதிப்புக் கூட்டலின் (ஜி.வி.ஏ) பங்கு 29.2% ஆகவும், 2021-22 ஆம் ஆண்டில் அகில இந்திய உற்பத்தியில் எம்.எஸ்.எம்.இ உற்பத்தி துறையின் பங்கு 36.2% ஆகவும் இருந்தது.

வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளிவிவர இயக்குநரகத்திலிருந்து (டி.ஜி.சி.ஐ.எஸ்) பெறப்பட்ட தகவல்களின்படி, 2022-23 ஆம் ஆண்டில் அகில இந்திய ஏற்றுமதியில் எம்.எஸ்.எம்.இ குறிப்பிட்ட தயாரிப்புகளின் ஏற்றுமதியின் பங்களிப்பு 43.6% ஆகும்.

உதயம் பதிவு இணையதளம் தொடங்கப்பட்டதிலிருந்து 01.07.2020 முதல் 08.08.2023 வரை 2,18,69,557 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் 12,84,04,488 வேலைவாய்ப்புகளை பதிவு செய்துள்ளன. இதில் உதயம் அசிஸ்ட் இணையதளத்தில் 30,96,140 முறைசாரா குறுந்தொழில் நிறுவனங்களும் அடங்கும். இதில் 38,57,385 வேலைவாய்ப்புகள் உள்ளன.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன அமைச்சகம் மத்திய அரசின் திட்டமான எம்.எஸ்.எம்.இ சாம்பியன்ஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

எம்.எஸ்.எம்.இ.களின் உற்பத்தி செயல்முறைகளை நவீனப்படுத்துதல், வீண் விரயங்களைக் குறைத்தல், புதுமையை ஊக்குவித்தல், வணிக போட்டித்தன்மையை கூர்மைப்படுத்துதல் மற்றும் அவற்றின் தேசிய மற்றும் உலகளாவிய அணுகல் மற்றும் சிறப்பை எளிதாக்குவது இதன் நோக்கமாகும்.

நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட உற்பத்தி செய்யும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (எம்.எஸ்.எம்.இ) நன்மைக்காக இந்த்த் திட்டங்கள் பொருந்தும்.

இத்தகவலை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

*****

(Release ID:1947397)

ANU/AD/IR/KRS


(Release ID: 1947585) Visitor Counter : 145


Read this release in: English , Urdu