மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

ஒருங்கிணைந்த பிரிவு அதிகாரிகள்'/ சுருக்கெழுத்தாளர்கள்' (கிரேடு-'பி'/ கிரேடு-'1') வரையறுக்கப்பட்ட துறைப் போட்டித் தேர்வு, 2018 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன

Posted On: 07 AUG 2023 6:24PM by PIB Chennai

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2023 மார்ச் மாதம் நடத்திய ஒருங்கிணைந்த பிரிவு அலுவலர்கள்/ சுருக்கெழுத்தாளர்களின் (கிரேடு-'பி'/ கிரேடு-1) வரையறுக்கப்பட்ட துறைப் போட்டித் தேர்வு, 2018 மற்றும் ஆகஸ்ட், 2023-ல்நடைபெற்ற சேவைப் பதிவேடுகளின் மதிப்பீடு ஆகியவற்றின் முடிவுகள் அடிப்படையில், தகுதியின் அடிப்படையில், 2018 ஆம் ஆண்டின் தேர்வுப் பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பிரிவு வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

 

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தனது வளாகத்தில் தேர்வுக்கூடக் கட்டடம் அருகே 'வசதி மையம்' ஒன்றைக் கொண்டுள்ளது. தேர்வர்கள் வேலைநாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை05.00 மணி வரை நேரிலோ அல்லது தொலைபேசி எண்கள்  (011)- 23385271/23381125/23098543 மூலமாகவோ தேர்வு முடிவுகள் தொடர்பான தகவல்களை/ விளக்கங்களைப்  பெற்றுக்கொள்ளலாம். தேர்வு முடிவுகள்www.upsc.gov.in என்ற  யுபிஎஸ்சி இணையதளத்திலும் கிடைக்கும். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

********

ANU/SM/SMB/KRS

 

 


(Release ID: 1946540)
Read this release in: English , Urdu , Hindi