நிலக்கரி அமைச்சகம்
தமிழ்நாட்டில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்.எல்.சி) நிறுவனத்தின் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் இழப்பீடு வழங்கிய விவரங்கள்
ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கும் ஒரே பொதுத்துறை நிறுவனம் என்.எல்.சி இந்தியா மட்டுமே
Posted On:
07 AUG 2023 3:48PM by PIB Chennai
என்.எல்.சி., இந்தியா நிறுவனத்திற்கு தேவையான நிலங்கள், நடைமுறையில் உள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்படி, மாவட்ட நிர்வாகத்தால் கையகப்படுத்தப்படுகின்றன. நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் பிற புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றப் பயன்கள் முழுமையாக வழங்கப்படுவதுடன் வாழ்வாதாரங்களும் பாதுகாக்கப்படுகின்றன. தற்போது, "தொழில் நோக்கங்களுக்காக தமிழ்நாடு நிலம் கையகப்படுத்தும் சட்டம், 1997"ன் படி, முதல் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி இழப்பீடு நிர்ணயம், இரண்டாவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் மற்றும் ஆர்.எஃப்.சி.டி.எல்.ஆர் சட்டம், 2013 இன் மூன்றாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான விதிகளுடன் நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுரங்க மேம்பாட்டிற்குத் தேவையான சுமார் 1054 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, தொடர்ச்சியான மின் உற்பத்தி தக்கவைத்துக் கொள்ளப்படும். இது மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்யும்.
விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 லட்சம் (25.08.2022 தேதியிட்ட சிறப்பு அரசாணை நிலை எண் 185, குறைந்தபட்ச நில இழப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு ரூ.23 லட்சம் மற்றும் மீதமுள்ள ரூ.2 லட்சம் முன்பணமாக வழங்கப்படுகிறது)
(ii) ஊரகப் பகுதிகளில் இருந்து கையகப்படுத்தப்படும் வீட்டுமனை நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 லட்சம்.
(iii) நகர்ப்புறங்களிலிருந்து கையகப்படுத்தப்படும் வீட்டு நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.75 லட்சம்.
என்.எல்.சி.ஐ.எல். திட்டங்களுக்கு, நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி பொருந்தக்கூடிய மொத்த நில இழப்பீட்டுத் தொகை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கையின் அடிப்படையில் டெபாசிட் செய்யப்படுகிறது. நில உரிமையாளர்களிடமிருந்து தேவையான விளக்கங்களைப் பெற்ற பின்னர் நில எடுப்பு அலுவலர் தனிப்பட்ட நில உரிமையாளர்களுக்கு மின்னணு பரிவர்த்தனை (இ-பேமெண்ட்) மூலம் நில இழப்பீட்டை வழங்குகிறார். இவை தவிர புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ஏற்பாடுகளின் கீழ் பணப்பயன்களும் நடைமுறையில் உள்ள ஏற்பாடுகளின்படி வழங்கப்படுகின்றன.
நெய்வேலி மண்டலத்தில் திட்ட பாதிப்பு நபர் (பிஏபி) களுக்கு வழங்கப்பட்ட மொத்த வேலை வாய்ப்புகள் பின்வருமாறு:
வ.எண்
|
ஆண்டு
|
நிரந்தர பணி
|
ஏஎம்சி அல்லாத வேலை
|
ஏஎம்சி வேலை
|
மொத்தம்
|
1
|
2009க்கு முன்
|
1827
|
1510
|
--
|
3337
|
2
|
2009-2019
|
--
|
1214
|
--
|
1214
|
3
|
2019-2021
|
--
|
706
|
--
|
706
|
4
|
2021-22
|
--
|
265
|
--
|
265
|
5
|
2022-23
|
--
|
180
|
42
|
222
|
6
|
2023-24
|
--
|
--
|
154
|
154
|
மொத்தம்
|
1827
|
3875
|
206
|
5898
|
இதுவரை 5126 ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்.எல்.சி.ஐ.எல் நிறுவனத்தில் நிரந்தர ஊழியர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அடையாள அட்டைச் சட்டம் 1947-ன் கீழ் 12(3) ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேலும் 517 ஒப்பந்தத் தொழிலாளர்களை நிறுவனத்தின் பணிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நெய்வேலியில் ஒப்பந்ததாரர்களால் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள். நெய்வேலியில் உள்ள சுரங்கங்களுக்கு 192 சுரங்க சர்தார், சர்வேயர் மற்றும் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை என்.எல்.சி.ஐ.எல் வெளியிட்டுள்ளது. இதில் உள்ளூர் பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதில் விண்ணப்பித்த 39 திட்ட பாதிப்பு நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். எஸ்.எம்.இ ஆபரேட்டர் உதவியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு (3 ஆண்டு பயிற்சி திட்டத்தின் கீழ்) முறையே 238 பயிற்சி இடங்கள் மற்றும் 262 பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பை என்.எல்.சி.ஐ.எல் வெளியிட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 16.08.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்திற்கு ஒன்று வீதம், 1000 பி.ஏ.பி.க்களுக்கு தொடர்ச்சியான ஒப்பந்த வேலை. இதில் 206 ஏ.எம்.சி வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. குரூப் சி மற்றும் டி பிரிவுகளில் நிரந்தர பணிக்கான எழுத்துத் தேர்வில் பி.ஏ.பி.க்களுக்கு போனஸ் 20 மதிப்பெண்கள். டி.என்.பி.எஸ்.சி.யில் (குரூப்-1, குரூப்-2, குரூப்-4) போட்டித் தேர்வுகளுக்கு பி.ஏ.பி.க்களுக்கு சிறப்பு பயிற்சி. தொழில்நுட்ப ரீதியாக தகுதிவாய்ந்த பி.ஏ.பி.க்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டங்கள்.
மாண்புமிகு அமைச்சர்கள் தலைமையில் என்.எல்.சி.ஐ.எல் நிறுவனத்துடன் இணைந்து திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், ஊராட்சித் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கூட்டங்களை நடத்தி நில உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளது
மேலும், கிராம மக்களுடன் முறைசாரா கூட்டங்கள் பல முறை நடத்தப்பட்டன. தலைமைச் செயலாளர் மற்றும் தொழில் துறை ஏ.சி.எஸ்., தலைமையில், பிரச்னைகளுக்கு தீர்வு காணும் கூட்டம் நடைபெற்றது .
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர், நில உரிமையாளர்கள் மற்றும் ஊராட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் முடிவில், விவசாய நிலங்களுக்கான குறைந்தபட்ச இழப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. விவசாய நிலங்களுக்கு இவ்வளவு இழப்பீடு வழங்கும் இந்தியாவின் ஒரே பொதுத்துறை நிறுவனம் என்.எல்.சி இந்தியா மட்டுமே. முதல் முறையாக, ஒரு ஏக்கர் நிலம் மற்றும் ஒரு வீடு இழந்தால், நில உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது. என்.எல்.சி.ஐ.எல் நிறுவனத்தால் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு திருத்தப்பட்ட புதிய சலுகைகளை பெரும்பாலான நில உரிமையாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், என்.எல்.சி.ஐ.எல் தங்கள் நிலங்கள் மற்றும் வீடுகளை இழக்கும் உரிமையாளர்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை சரி செய்யவும், அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு பிரச்னைகளை சுமூகமாக தீர்க்கவும், நெய்வேலியில் குறை தீர்க்கும் பிரிவு ஏற்படுத்தப்பட்டு, நிலம் கையகப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் குறைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***********
ANU/SM/SMB/KPG
(Release ID: 1946514)
Visitor Counter : 337